பக்கம்:குமரப் பருவம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குமரப் பருவம்

முகத்திலே மீசை அரும்பு கட்டுகிறது; சிறுமியின் மார்பகம் முகைபோன்று மேல் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? இவை போன்ற மாறுதல்களை உண்டாக்கத் துணை புரிபவை எவை என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

          மனிதனுடைய உடம்பிலே பலவகையான சுரப்பிகள்(Glands) இருக்கின்றன. நாவின் அடியிலே உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன. அவை உமிழ்நீரைச் சுரந்து, அதை உணவோடு கலக்கச் செய்கின்றன. அந்த வகையில் அவை உணவு சீரணமாவதற்கு உதவுகின்றன. கல்லீரலும் ஒரு பெரிய சுரப்பிதான். அது பித்தநீரைச் சுரந்து உணவுடன் கலக்கச் செய்து சீரணத்திற்கு உதவுகின்றது.
          உமிழ்நீர்ச் சுரப்பி, கல்லீரல் சுரப்பி போலல்லாமல் வேறு வகையான பல சுரப்பிகளும் உடம்பிலே உண்டு. அவற்றில் உண்டாகும் சுரப்பு நீரை அவை நேராக இரத்தத்துடனேயே கலக்கும்படி செய்கின்றன. அவற்றிற்கு நாளமில்லாச் சுரப்பிகள் என்று பெயர்.
          இந்த நாளமில்லாச் சுரப்பிகள் சிலவற்றிற்கும் மலர்ச்சி யெய்துதலுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை இப்பொழுது கண்டறிந்திருக்கிறார்கள். எதிரேயுள்ள படத்தில்லே பல நாளமில்லாச் சுரப்பிகள் உடலில் அமைந்துள்ள விதத்தைக் காணலாகும்.
          அண்டச் சுரப்பிகள் இரண்டு உண்டு; அவை பெண்ணின் உடம்பிலே இருக்கும். விந்துச் சுரப்பிகளும் இரண்டு உண்டு. அவை ஆணின் உடம்பிலே இருக்கும் இவை இனப்பெருக்கத்திற்கு உதவுவனவாகையால் பொதுவாக இவற்றை இனப்பெருக்கச் சுரப்பிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/13&oldid=1230332" இலிருந்து மீள்விக்கப்பட்டது