பக்கம்:குமரப் பருவம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

குமரப் பருவம்

என்பார்கள். மூளையின் அடித்தளத்திலே அமைந்திருப்பது பிட்டூட்டரிச் சுரப்பி. அதற்கும் இனப்பெருக்கச் சுரப்பிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிட்டூட்டரிதான் இனப்பெருக்கச் சுரப்பிகளை வேகமாக வேலைசெய்யுமாறு தூண்டுகின்றது. அவ்வாறு இனப்பெருக்கச் சுரப்பிகள் வேலை செய்யும்போது அவற்றிலிருந்து வரும் சுரப்புநீரே மலர்ச்சி யெய்தும் பருவத்தில் உடம்பிலேயும், உள்ளத்திலேயும் பலவகையான மாறுதல்களைச் செய்யக் காரணமாகின்றது.

         பிட்டூட்டரியில் முக்கியமாக இரண்டு விதமான சுரப்பு நீர்கள் உண்டாகின்றன. ஒன்று உடம்பின் வளர்ச்சிக்கு உதவுகிறது; முக்கியமாகக் கைகால்களின் நீளத்தையும் வளர்ச்சியையும் அமைக்கின்றது. மற்றொன்று இனப்பெருக்கச் சுரப்பிகளின் வேலையைத் துரிதப்படுத்துகின்றது. மலர்ச்சி யெய்துவதற்குச் சற்று முன்பு இந்தச் சுரப்புநீர் அதிகமாக உற்பத்தியாகிறதென்று நம்ப இடமுண்டு. அதே சமயத்தில் இனப்பெருக்கச் சுரப்பிகளும் இந்தச் சுரப்பு நீரை ஏற்று அதனால் வேகமாக வேலை செய்வதற்கு ஏற்ற பக்குவத்தை அடைகின்றன. இவையே மலர்ச்சி யெய்துவதற்குக் காரணமாகின்றன. இதற்கு முன்பே இனப்பெருக்கச் சுரப்பிகள் ஓரளவு வேலைசெய்து கொண்டுதானிருக்கின்றன. அதன் காரணமாகவே ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இளமைப் பருவத்திலும் தெரிகின்றன. ஆனால், பிட்டூட்டரியினால் துரிதப்படுத்தப்பட்ட பிறகே இந்த வேறுபாடுகள் நன்றாக அமைகின்றன. உடல் அமைப்பில் ஆண் பெண்களுக்குரிய வேறுபாடுகள் நன்றாக அமைவதோடு இனப்பெருக்கச் சக்தியும் ஏற்படுகின்றது. இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாக ஆணுறுப்புக்களில் உள்ளவை விந்துச் சுரப்பிகள். அவை மலர்ச்சி யெய்துகின்ற
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/15&oldid=1230352" இலிருந்து மீள்விக்கப்பட்டது