பக்கம்:குமரப் பருவம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாளமில்லாச் சுரப்பிகள்
15

காலத்திலே பருத்து விந்தணுக்களை ஏராளமாக உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாகப் பெண்ணுடம்பிலே உள்ள உறுப்புக்கள் அண்டச் சுரப்பிகள். பூப்பெய்திச் சிறிது காலத்திற்குள் அவை இரண்டும் மாதந்தோறும் மாறிமாறி ஒவ்வொரு அண்டத்தை உற்பத்திசெய்து கருப்பைக்கு அனுப்புகின்றன. சற்றேக்குறைய 50-ஆம் வயதிலே பெண்களின் மாதவிடாய் நிற்கும் வரையில் இந்த வேலை இடைவிடாமல் நடைபெறுகிறது.

         அண்டச் சுரப்பிகள் அண்டங்களைத் தயார் செய்து அனுப்புவதோடு கருப்பம் ஏற்படுவதற்கும் கரு முதிர்ந்து பிறப்பதற்கும் உதவும் இருவிதமான சுரப்பு நீர்களையும் உண்டாக்குகின்றன.
         (இனப்பெருக்கம் சம்பந்தமாக விரிவாக, கருவில் வளரும் குழந்தை என்ற நூலில் எழுதியுள்ளேன். அதிற்கண்டு கொள்க.)
         அண்டச் சுரப்பிகளில் உண்டாகும் சுரப்புநீரே பெண்ணின்மார்பகம் வளர்வதற்கும் உதவுகின்றது. அதே சமயத்தில் இனப்பெருக்க உறுப்புக்களான கருப்பை, யோனி முதலியனவும் வளர்ச்சியடைகின்றன. இம்மாறுதல்களை யொட்டி மாதவிடாய் தொடங்குகிறது.
         முதலில் மாதவிடாய் ஒழுங்காக இராது. ஆனால் முதிர்ச்சியடைய அடைய இதிலே ஒழுங்குஏற்பட்டுவிடும்.
         பிட்டூட்டரிச் சுரப்பிதான் முதலில் இனப்பெருக்கச் சுரப்பிகளை வேகமாக வேலை செய்யத் தூண்டுகின்றன என்று கண்டோம். உடல் வளர்ச்சிக்கும் அதுவே காரணம் என்றும் கண்டோம். மலர்ச்சி யெய்துகின்ற பருவத்திலே உடல் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்குகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/16&oldid=1230357" இலிருந்து மீள்விக்கப்பட்டது