பக்கம்:குமரப் பருவம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 குமரப் பருவம் யெல்லாம் அநுபவிப்பதாகவும் பகற்கனவு காண்பதில் இது சமயத்தில் இரு பாலாருக்கும் இச்சையுண்டாகிறது. மலர்ச்சி யெய்துவதற்குச் சற்று முன்னதாக இவை யெல்லாம் ஏற்படுகின்றன. ஆனால், மலர்ச்சி யெய்திய பிறகு இவையெல்லாம் மாறிவிடுகின்றன. மலர்ச்சி யெய்தி மாதங்கள் செல்லச் செல்ல நடத்தை திருந்தி அமைவதைப் பார்க்கலாம். ச. மூ க ப் பொதுநலப் பணிகளிலே நாட்டம் ஏற்படுகிறது. முன்பு இருந்த சோம்பலும் உதாசீனமும் மறைகின்றன. உள்ளக் கிளர்ச்சிகளை அடக்கியாளும் சக்தியும் பிறக்கின்றது. ஆண்களுக்குப் பெண்களிடமும், பெண்களுக்கு ஆண்க ளிடமும் இப்பொழுது அலட்சிய புத்தி இருப்பதில்லை. மனிதனுடைய வாழ்க்கையிலே இரண்டு பருவங்களில் வளர்ச்சி மிக வேகமாக நடைபெறுகிறது. வேகமான வளர்ச்சி முதலிலே கருப்பையிலே தொடங்குகிறது. மிகச் சிறிய உயிரணுவாக வாழ்க்கையைத் தொடங்கிய கரு பத்து மாதத்திற்குள் வேகமாக வளர்ந்து கை, கால்,கண், மூக்கு முதலான உறுப்புக்களெல்லாம் பெற்று மானிடக் குழந்தையாகி விடுகிறது. கருப்பையிலே தொடங்கிய இந்த வேகமான வளர்ச்சி குழந்தை பிறந்து சுமார் ஆறு மாதம் வரையில் நீடிக்கிறது. இருந்தாலும் இந்த வேகம் கருப்பையினுள் இருந்த வளர்ச்சி வேகத்திற்குக் குறைந் ததுதான். மெதுவாக இது குறைந்துகொண்டே வந்து ஆறுமாதங்களான பிறகு அநேகமாக ஒரே மாதிரியான நிலையை அடைகிறது. இப்படி மெதுவாக நடைபெறும் வளர்ச்சி மலர்ச்சி யெய்துகின்ற த ரு ண த் தி ேல திடீரென்று மறுபடியும் வேகம் பெறுகிறது. மலர்ச்சி யெய்தச் சுமார் ஒராண்டு இருக்கும்போதே இந்த வேகம் தொடங்குகிறது எனலாம். கருவின் வளர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/27&oldid=806552" இலிருந்து மீள்விக்கப்பட்டது