பக்கம்:குமரப் பருவம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தையிலே மாறுபாடு 27 வேகத்தைப் போல இது அவ்வளவு அதிகமாக இல்லா விட்டாலும் உவகத்தில் ஒருவன் அல்லது ஒரு த் தி ஒடியாடி வாழும் நாட்களில் இதுவே அதிகமான வளர்ச்சியை உண்டாக்கும் பருவமாகும். குமரப் பருவம் முதிர முதிர இந்த வளர்ச்சி வேகம் குறைந்து கொண்டே வந்து சுமார் 18 வயதிலோ அல்லது அதிகமால்ை 80 வயதிலோ பெரும்பாலும் நின்றே போகும். பாயின்டன் என்பவர் அமெரிக்காவில் 1200 பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப்பற்றி ஆராய்ச்சி செய்தார். அந்தக் குழந்தைகள் 1; மாதம் முதல் 18 ஆண்டுவரை வயதுடையவர்களாக இருந்தார்கள். அவர் களின் வளர்ச்சியை ஆராய்ந்து கீழ்க்கண்டவாறு அவர் முடிவுக்கு வந்தார். குழவிப் பருவத்திலே உடல் வளர்ச்சி மிக வேகமாக நடைபெறுகிறது. குழந்தைப் பருவத்திலே அதாவது பத்து வயதுவரை மெதுவாகிறது. பிறகு 10, 11 ஆம் வயதில் மறுபடியும் வேகம் பெற்று ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் புதிய வேகத்தோடு நடைபெறுகிறது. குமரப் பருவம் முதிர முதிர மெதுவாகக் குறைந்து கொண்டே வந்து ஒரு நிலையில் நின்று விடுகிறது. மலர்ச்சி யெய்துவதற்கு முன்பு இவ்வாறு வளர்ச்சி யிலே வேகம் உண்டாவதற்குச் சுரப்பிகளின் வேலையே காரணம் என்று முன்பே குறிப்பிட்டேன். அதனல் உடல் வளர்ச்சி பெறுகிறது; இனப் பெருக்கத்திற்கு உதவும் உறுப்புக்கள் நன்கு வளர்கின்றன; இளமைத் தோற்றம் மாறி ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரிய தோற்றம் அமைகிறது; பெண்ணிண் மார்பகம் வளர் கின்றது. இவ்விதமான மாறுபாடுகள் வே க ம ா க உண்டாவதே நடத்தையில் மாறுபாடு காண்பதற்கும் காரணமாகின்றது. இளமையிலே இருந்த உருவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/28&oldid=806554" இலிருந்து மீள்விக்கப்பட்டது