பக்கம்:குமரப் பருவம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குமரப் பருவம் தோற்றம் மாறுகிறதல்லவா ? அதிலும் முக்கியமாக இனப் புெருக்கத்திற்கு உதவும் உறுப்புக்கள் மாறுகின்றன அல்லவா ஆதலால் இந்தப் புது நிலைமைக்கேற்ப நடத்தையையும் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. அது முதலிலே கொஞ்சம் மனத் தடுமாற் றத்தை உண்டாக்குகிறது. அதுவே மலர்ச்சி யெய்து வதற்குச் சற்று முன்னுல் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணம் என்று கூறலாம். மலர்ச்சி யெய்துகின்ற காலத்தில் உடல் வளர்ச்சி யைப்பற்றிக் கூறும் போது இதுவரை முக்கியமாகப் புற உறுப்புக்களையே கவனித்தோம். பிட்டுட்டரி. இனப் பெருக்கச் சுரப்பிகள் ஆகிய இரண்டு அக உறுப்புக்களை மட்டும் சிறப்பாகப் பார்த்தோம். மற்ற அகவுறுப்புக்கள் பலவும் புறவுறுப்புக்களைப் போலவே இந்தப் பருவத்தில் வளர்ச்சியடைகின்றன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். இதயம் அளவிலே பருக்கிறது. பிறக்கும்போது அதன் நிறை எவ்வளவு இருந்ததோ அதைப் போலச் சுமார் ஏழு மடங்கு நிறை பன்னிரண்டாவது வயதிலே இருக்கும்; வயது 17, 18 ஆகும்போது பன்னிரண்டு மடங்காக நிறை உயர்ந்துவிடும். இதைப் போலவே சுவாச்ப்பையும் அளவிலும், நிறை யிலும் அதிகரிக்கிறது. சீரண உறுப்புக்கள் இப்பரு வத்திலே சிறப்பாக வளர்கின்றன. மலர்ச்சிப் பருவத்திலே வளர்ச்சி துரிதப்படுவதால் உணவும் அதிகமாக வேண்டியிருக்கிறது. குமரப் பருவத் தினர் வயது முதிர்ந்தவரைவிட அதிகமாக உணவு கொள்ளமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/29&oldid=806557" இலிருந்து மீள்விக்கப்பட்டது