பக்கம்:குமரப் பருவம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழமையும் அரட்டையும் 41 இப் பருவத்தினரிடமே தங்கள் கருத்துக்களைப் புகுத்துவதில் கண்ணுங் கருத்துமாக இருக்கும் அரசியல் வாதிகள், சமய வாதிகள் முதலியோர் மேலே கூறிய உண்மையை நன்கு உணர்ந்தவர்கள். அவர்களுடைய போதனைகள் நன்மைக்கும் காரணமாகலாம்; தீமைக்கும் காரணமாகலாம். தோழமையும் அரட்டையும் சிறுவர்களுக்கும். சிறுமிகளுக்கும் விளையாட்டுத் தோழர்கள் நிறைய வேண்டும். அவர்கள் தோழமை யெல்லாம் முக்கியமாக விளையாட்டைப் பொறுத்தே இருக்கும். ஆனால், குமரப் பருவத் தொடக்கத்திலேயே இது மாறத் தொடங்கி விடுகிறது. தான் விரும்பும் விளையாட்டுக்கள். ஆட்டங்கள் முதலியவற்றிலேயே ஆர்வங் காட்டும் ஒத்த வயதினரிடம் இப்பொழுது நட்பு இருக்கும்; இருந்தாலும் நட்பு என்பது இப்பருவத்திலே விளையாட்டைப் பொறுத்து மட்டும் இருக்காது. இயற் கைத் திறமைக்கேற்பக் குமரன் அல்லது குமரியின் விருப் பங்கள் இப்பொழுது வெவ்வேறு துறைகளில் செல்லு கின்றன. ஒருவனுக்கு ஒவியம் வரைவதிலே நாட்டம்; ஒருத்திக்குப் பாட்டிலே விருப்பம் அதிகம்; ஒருவனுக்குப் படிப்பிலேயே ஆர்வம். இப்படி வெவ்வேறு விருப்ப முள்ளவர்கள் அதே விருப்பமுள்ள மற்றவர்களுடன் நட்புக் கொள்ளத் தொடங்குவார்கள்: அறிவுத் திறமைக் கேற்றவாறும் நட்பு ஏற்படும். ஒருவனுக்குச் சில தன்மை களிலே, திறமைகளிலே விருப்பமிருக்கும்; உருவத் தோற்றத்திலும், நடத்தையிலும், பேச்சிலும் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/42&oldid=806589" இலிருந்து மீள்விக்கப்பட்டது