பக்கம்:குமரப் பருவம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 குமரப் பருவம் யெல்லாம் பெரும்பான்மையாக அமைந்திருப்பவரிடம் நட்பு ஏற்படுவதும் இயல்பு. குமரப் பருவம் முதிர முதிர வேற்றுப்பாலாரிடம் அன்பு அதிகமாகத் தோன்றுகிறது. அவர்களிடமும் தனக்குப் பிடித்தமானவற்றை எதிர்பார்த்தே நட்பு வளரத் தொடங்கும். குமரப் பருவத்தினரிடத்தே மற்ருெரு தன்மை யையும் காணலாம். தாம் அதிகமாகப் பழகும் நண்பர் களைப்போலவே பேசவும், உடுக்கவும், நடந்துகொள் ளவும் அவர்கள் விரும்புவார்கள். சாதாரணமாகக் குமரப் பருவத்தினர் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் தமது தோழர்களின் போக்குக்கு மாருக வெளிப்படையாக நடந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். அதனலேயே தோழர்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெரும்பாலும் ஒத்த பண்புடைய வர்களையே நாடுவார்கள். குமரப் பருவத்தினருக்கு உரையாடலிலே மிகுந்த விருப்பம் உண்டு. எல்லோரும் பேசுவதிலேயே அதிக நாட்டங் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதிலே அத்தனை பொறுமை இருக்காது. விளையாட்டு முடிந்ததும் வட்டமாகச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அரட்டையடிக்கத் தொடங்கி விடுவார்கள். வேடிக்கை, கேலி, கிண்டல் எல்லாம் வரும். தங்கள் தனிப்பட்ட நண்பர்களைக்கூடக் கேவி செய்யத் தொடங்குவார்கள். அவர்கள் நடை உடை பாவனை களைப் பரிகாசம் செய்வார்கள். அரட்டையிலே வரம்பு கடந்தும் போவதுண்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/43&oldid=806591" இலிருந்து மீள்விக்கப்பட்டது