பக்கம்:குமரப் பருவம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழமையும் அரட்டையும் *3 சினிமாவுக்குப் போனலும் சரி, இசையரங்கிற்குப் போனலும் சரி. இவர்கள் பேச்சை மட்டும் நிறுத்துவது கடினம். குசுகுசுவென்ருவது பேசிக்கொள்வார்கள். குமரப் பருவத்தினர் கூடியிருக்கும்போது விவா தங்கள் .ெ த ா ட ங் கு வ து எண் டு. சாதாரணமாகத் தொடங்கிய அரட்டை காரசாரமான விவாதமாக மாறிவிடும். கோபதாபங்களெல்லாம் மேலோங்குவதும் உண்டு. சண்டை போடுதல், வசையம்பு தொடுத்தல் என்றெல்லாம் ஆகிவிடும். வசையம்பு தொடுப்பதிலே பெண்கள் முதன்மை பெறுவார்கள். உரையாடலிலே இப்படிப் பொதுவாகக் குமரப் பருவத்தினருக்கு விருப்பமிருப்பினும் பேசா மெளனி களாக இருக்கும் சிலரும் உண்டு.தகுதியின்மை, பேச்சுத் திறனின்மை ஆகிய உணர்ச்சிகளால் கட்டுண்டு அவர்கள் மெளனம் சாதிக்கிருர்கள். பேச முயன்ருலும் குழப்ப மடைந்துவிடுகிருர்கள். ஆசை யிருந்தும் ஏதோ ஒருவித அச்சம் அவர்கள் நாவைக் கட்டிவிடுகிறது. இப்படிப் பட்டவர்கள் கூட்டத்தை விட்டு விலகியிருக்க முயல் வார்கள்; கற்பனையாகச் சம்பாஷணையைத் தனியாக நடத்திக்கொண்டு தங்கள் குறைபாட்டிற்கு ஆறுதல் தேட முயல்வார்கள். நீள நீளமாக எழுதி எழுத்து மூலம் திருப்தியடையவும் நாடுவார்கள். தம்மைவிட வயதிற் குறைந்தவர்களிடமோ, தகுதியில் குறைந்தவர்களி டமோ அதிகமாகப் பேசியும் ஆறுதலடைவார்கள். குமரப் பருவத்தினரின் அரட்டையிலே சினிமா, அரசியல்,பத்திரிகைச் செய்திகள், விளையாட்டுப் பந்தயங் கள், புத்தகங்கள், கதைகள், தேநீர் விருந்துகள் எல்லாம் முக்கியமாக இருக்கும். அரசியல் பிரமுகர்கள், சினிமர நட்சத்திரங்கள், நாட்டியமாடுவோர் ஆசியர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/44&oldid=806593" இலிருந்து மீள்விக்கப்பட்டது