பக்கம்:குமரப் பருவம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குமரப் பருவம் எல்லாரும் அடிபடுவார்கள். கேலியும் சிரிப்பும் பொத்துக் கொண்டு வரும். கல்யாணப் பேச்சு, காதல்பற்றிய பேச்சு ஆகியவையும் வரும். இவ்வாறு உரையாடுவதன் மூலம் குமரப் பருவத் தினர் தங்கள் கருத்துக்களைச் செம்மைப் படுத்திக் கொள்ளுகிருர்கள். மற்றவர்கள் அவற்றிலுள்ள குறை பாடுகளே எடுத்துக் கூறுவதன் மூலமும், வேறு கருத்துக் களே எடுத்து விளக்குவதன் மூலமும் மனத்தெளிவு பெறு கிருர்கள். நயமாகப் பேசவும், மற்றவர்கள் விரும்பும் படியாகப் பேசவும் தெரிந்துகொள்கிருர்கள். விருப்பமும் துடிப்பும் குழந்தையினுடைய உலகம் மிகச் சிறியது. தாய், தந்தை, வீட்டிலுள்ளவர்கள், உறவினர்கள் ஆகியோ ரிலும், வீடு சுற்றுப்புறம் ஆகிய இவற்றிலும் அது அடங்கிப் போகும். ஆனல் குழந்தை வளர வளர இந்த உலகமும் விரிவடைகிறது. பள்ளிக்கூடம் அதிலே சேருகிறது.குமரப் பருவத்திலே அது மிகவும் விரிவடை கிறது. சமூகம், நாடு, உலகம் என்பனவெல்லாம் நன்ருக குமரப் பருவத்தினரின் சிந்தனையில் வருகின்றன. சமூகப் பிரச்சினைகள், நாட்டு நடவடிக்கைகள் உலகவிவகாரங்கள் எல்லாவற்றிலும் அவர்கள் கருத்துச் செலுத்துகிருர்கள். அரசியல், பொருளாதாரம், சமூகச் சீரமைப்பு, சமய விஷயங்கள் முதலியவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள் எண்ணுவதோடு தமது கருத்துக்களைப்பற்றித் தோழர்க ளோடு விவாதம் செய்யவும் ஆர்வங் காட்டுகிருர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/45&oldid=806595" இலிருந்து மீள்விக்கப்பட்டது