பக்கம்:குமரப் பருவம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

குமரப் பருவம்

இருக்கின்றது. அதுதான் குமரப் பருவம். ஆண் குழந்தை குமரனாக வளர்கின்றது; பெண் குழந்தை குமரியாக மலர்கின்றது.

        ஒவ்வொரு முதிர்ந்த ஆணும். ஒவ்வொரு முதிர்ந்த பெண்ணும் இந்தப் பருவத்தைக் கடந்தே வந்திருக்கிறார்கள். இந்தப் பருவத்தின் குமுறல்கள், சஞ்சலங்கள், உற்சாகங்கள், புதிய உள்ளக்கிளர்ச்சிகள், ஆவேசங்கள் எல்லாவற்றையும் முதிர்ந்தோர் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் தாண்டியிருக்கிறார்கள்.
        குழந்தை அரும்பு குமரப் பருவத்திலே முகையாக முகிழ்த்து மலராகவும் மலர்கின்றது; அந்தக் குமரமலர் முதிர்ந்து காயாகவும் கனியாகவும் விளைகின்றது இந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது; இதில் இடைவேளை என்பதில்லை; ஒய்வென்பதில்லை. குழந்தைப் பருவம் இந்த வயதில் முடிவடையும். குமரப் பருவம் இந்த வயதில் தொடங்கும், இந்த வயதில் முடிவடையும் என்று பொதுப்படையாக அறுதியிட்டுக் கூறுவதற்கும் ஒரு நிச்சயமான வரையறை கிடையாது. இவ்வாறு ஏற்படும் வளர்ச்சியிலும் மாறுதலிலும் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு; ஆண்களுக்குள்ளேயும் வேறுபாடு உண்டு; பெண்களுக்குள்ளேயும் வேறுபாடு உண்டு; ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகத் தெளிவான வேறுபாடு உண்டு; அதே சமயத்தில் பருவங்களுக்கு ஏற்ற உணர்ச்சிகளிலே, உள்ளக் கிளர்ச்சிகளிலே ஒருமைப்பாடும் இருக்கக் காண்கிறோம்.
        வளர்ச்சி யென்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயலாக இருந்தாலும் நன்கு விளங்கும் பொருட்டு அதைப் பல பருவங்களாகப் பிரித்துக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்கிறோம். அவ்வாறு செய்வதால் ஒரு பருவத்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/7&oldid=1229663" இலிருந்து மீள்விக்கப்பட்டது