பக்கம்:குமரப் பருவம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மலர்ச்சி எய்துதல்
7

திற்கும் மற்றொன்றிற்கும் தொடர்பில்லை என்று கருதக்கூடாது. இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டு குழந்தைப் பருவங்கடந்த குமரப் பருவத்தை இங்கு ஆராய்வோம்.

மலர்ச்சி எய்துதல்
        பறவைக் குஞ்சு பெரிதாகிவிட்டது. அது பறக்கப் பார்க்கிறது. ஆனால், இறக்கை இன்னும் முழுவளர்ச்சியும் வலிமையும் பெறாததால் நன்றாகப் பறக்க முடியாமல் சிரமப்படுகிறது. இந்த நிலையில்தான் குமரப் பருவத்தைத் தொடங்கும் ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள்.
        குமரப் பருவம் தொடங்குவதற்கு ஒரு எளிமையான அறிகுறியாகப் பெண்களிலே பூப்பெய்துதலைக் கூறலாம். ஆண்களிலே விந்துச்சுரப்பி வேலை செய்யத் தொடங்குவதைக் கூறலாம். இரு பாலாருக்கும் பொதுவாக இந்த நிகழ்ச்சிகளை `மலர்ச்சி எய்துதல்` என்ற தொடராலேயே இனிமேல் கூறுவோம்.
        குமரப் பருவம் என்பது பூப்பெய்துதலையோ அல்லது விந்துச்சுரப்பியின் வேலைத் தொடக்கத்தையோ மட்டும் குறிப்பதல்ல. குமரப் பருவம் என்பதற்கு இன்று இன்னும் விரிந்த பொருள் உண்டு. மலர்ச்சி எய்துதல் இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சி தொடங்கியுள்ளது என்ப தொன்றையே காட்டுகிறது. அது குமரப் பருவம் தொடங்குவதற்குச் சற்று முன்னரோ அல்லது குமரப் பருவத்தின் தொடக்கத்திலோ நிகழ்கின்றது. குமரப் பருவம் அதற்குப் பின்னும் நீடித்திருக்கிறது.
         எங்கள் பக்கத்திலே பெண் பூப்பெய்துதலை, அவள் பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று கூறுவது உண்டு. அதாவது இனிமேல் அவள் குழந்தையுமல்ல; சிறுமியு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/8&oldid=1230144" இலிருந்து மீள்விக்கப்பட்டது