பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குமரிக்கோட்டம்


பசு வயதானதாயிற்றே என்ற கவலையுடனேயே இருந்தன. நாகவல்லி பழனி குடும்பத்துக்கு அத்தகைய பெருமையும் கவலையும் கிடையாது.

"நாகு! தெரியுமா விசேஷம்?" " என்ன? எந்தக் கோட்டையைப் பிடித்து விட்டீர்கள்?"

"இடித்துவிட்டேன், கண்ணே!"

"எதை ?"

"மருங்கூர் மிராசுதாரின் மனக் கோட்டையை. அவர் தன்னுடைய கிராமத்திலே எவனாவது சீர்திருத்தம், சுயமரியாதை என்று பேசினால் மண்டையைப் பிளந்து விடுவேன் என்று ஜம்பமடித்துக்கொண்டிருந்தாரல்லவா ? நேற்று, அந்த மனக்கோட்டையை இடித்துத் தூள் தூளாக்கி விட்டேன். பெரிய கூட்டம்! பிரமித்துப் போய்விட்டார்."

"பேஷ் ! சரியான வெற்றி. எப்படி முடிந்தது?"

"ஒரு சின்னத் தந்திரம்! மிராசுதார் மருமகன், இருக்கிறானே அவனுக்கும் மிராசுதாரருக்கும் மனஸ்தாபமாம். யுக்தி செய்தேன். அந்த மருமகனைத் தலைவராகப் போட்டுக் கூட்டத்தை நடத்தினேன் மிராசுதாரர் 'கப்சிப்' பெட்டிப் பாம்பாகிவிட்டார்."

"அவன் நமது இயக்கத்தை ஆதரிக்கிறானா?"

இயக்கமாவது, அவன் ஆதரிப்பதாவது! அவனுக்கு என்ன தெரியும்? ஒப்புக்கு உட்கார வைத்தேன்?

"என்னதான் பேசினான்?"

"அவனா? நாகா, நீ வரவில்லையே! வந்திருந்தால்