பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

33


தண்ணீர்கொண்டு வரச்சொல்லு" என்றார் செட்டியார். வழக்கமாக, மேஸ்திரிதான் தண்ணீர் கொட்டுவார். அவர் முதலியார் வகுப்பு, அன்று மேஸ்திரிக்கும் மீனாவுக்கும் பலமானபேச்சு, "ஆண் உசத்தியா, பெண் உசத்தியா" என்று. ஆகவே, குமரி கூப்பிட்டும் அவர் வரவில்லை. சரேலெனத் தண்ணீர்ச் செம்பை எடுத்துக்கொண்டு குமரியே போனாள். செட்டியாரும் எங்கேயோ கவனமாக இருந்ததால், தண்ணீர் எடுத்துவந்தது யார் என்று கூடக் கவனிக்காமல் கையை நீட்டினார். குமரி தண்ணீர் ஊற்றினாள். "போதுண்டா" என்றார் செட்டியார்; அவருடைய நினைப்பு தண்ணீர் கொட்டியது மேஸ்திரி தான் என்பது. குமரி களுக்கென்று சிரித்துவிட்டாள். செட்டியாருக்கு அப்போதுதான் விஷயம் விளங்கிற்று. அதுவரை அவர் உட்பிரஜாதியான் தொட்ட தண்ணீரைத் தொட்டதில்லை. என்ன செய்வது? அவள் அன்போடு அந்தச்சேவை செய்தாள்; எப்படிக் கோபிப்பது ? நீயா? என்று கேட்டார் ஆமாங்க! மேஸ்திரிக்குத்தான் வேலை சரியாகஇருக்கே ! அதனாலேதான் நான் எடுத்துவந்தேன். தப்புங்களா? கையைத்தானே கழுவிக்கொண்டிங்க, உள்ளுக்குச் சாப்பிட்டாதானே,தோஷம்" என்று கேட்டாள். தொட்ட நீரைத் தொடுவது கூடத் தோஷம் என்பதுதான் செட்டியாரின் சித்தாந்தம். ஆனால் அந்தப் பெண், சூதுவாதறியாது சொன்னபோது என்ன

செய்வார் ? செட்டியார் ஒருபடி முன்னேறினார்; உள்ளுக்குச் சாப்பிட்டாத்தான் என்னாவாம்? குடலா கறுக்கும் !" என்றார். "எல்லாம் மனசுதானுங்களே காரணம் !" என்று கொஞ்சுங் குரலில் கூறினாள் குமரி. "அது சரி !

3