பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

குமரிக் கோட்டம்


ஆமாம்!" என்று கூறுவிட்டு! விரைவாக உள்ளேபோய் விட்டார். அவள் விட்டாளா! கூடவே சென்று, செட்டியாரின் நெஞ்சிலே புகுந்து கொண்டாள். எல்லாம் மனம் தானே! சிவப்பழமாக இருந்தால் என்ன? மனந்தானே அவருக்கும்.

🞸 🞸 🞸

"யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார்."

"ஏன்? என்னா விஷயம்?" "செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்."

"அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி."

"பொடியுமில்லை.மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன்தான், தேனில் விழுந்த ஈபோல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒருபெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப் பார்க்காமே இருக்கிறான்? செட்டியார், என்னமோ கோயில் கட்டலாமென்று தான் வந்தார். அவர் கண்டாரா, இங்கே இந்த 'குண்டுமூஞ்சி' இருப்பாளென்று?"

"செட்டியார் மேலே பழிபோடாதே. அந்த ஆசாமி ரொம்ப வைதிகப் பிடுங்கல். அவ கைப்பட்ட தண்ணீரைககூடத் தொடமாட்டார். ஒரே மகன் அவருக்கு