பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

குமரிக் கோட்டம்


நினைத்தார். ஒரு கணம் அவ்விதம்நினைப்பார், மறுகணமே மாறிவிடுவார். "இதுதான் சோதனை —— மாயை என்னை மயக்க வந்திருக்கிறது — இதிலிருந்து தப்பித்தாக வேண்டும் என்று தீர்மானித்து, தேவார திருவாசகத்தையும் அடியார்கள் கதைகளையும் முன்பு படித்ததைவிட மேலும் சற்று அதிக ஊக்கமாகப் படிக்கத் தொடங்கினார். அந்தப் பாவையை மறந்துவிட வேண்டும் என்ற திட்டம் அவருடையது. பாபம், அவருக்கு அதுவரை தெரியாது. காதல் பிறந்தால், அதன் கனலின் முன்பு எந்தத்திட்டமும் தீய்ந்து போய்விடும் என்ற உண்மை. . "தோடுடைய செவியன்" என்ற பதிகத்தை அவர், அதற்கு முன்பு எத்தனையோ நூறுமுறை படித்ததுண்டு. அப்போதெல்லாம், இருஷபம் ஏறிக்கொண்டு, ஜடையில் பிறையுடன் சிவனார் வருவது போலவே, அவருடைய அகக்கண் முன் சித்திரம் தோன்றும்; பரமனுக்குப் பக்கத்திலே, பார்வதி நிற்பதும் தெரியும். ஆனால், அப்போதெல்லாம், ஐயனுடைய அருள் விசேஷத்தைப் பற்றியே செட்டியார் கவனிப்பார். குமரியின் மீது ஆசை உண்டான பிறகோ, பதிகம் பாடியானதும், பார்வதியும் பரமசிவனும் அவர் மனக் கண்முன் தோன்றுவதும், டார்வதி பரமசிவனை அன்புடன் நோக்குவதும், அந்த அன்புப் பார்வையால் ஐயனுடைய அகம் மகிழ்ந்துமுகம் மலர்வதும் ஆகிய காதல் காட்சியே அவருக்குத் தெரியலாயிற்று. பதிகம் பாடி, பிரேமையை மாய்க்க முடியவில்லை— வளர்ந்தது. ஏகாந்தமாக இருந்து பார்த்தார் — தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கிற்று. அவரையும் அறியாமல் அவர் மனத்திலே ஒருவகை அச்சம் குடி