பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

39


"வேடிக்கையாப் பேசறிங்க. அது அதுக்குன்னு ஆண்டவன் அளவு போடாமலா அனுப்புவாரு."

இப்படி ஏதாவது பேசுவாள் குமரி மாடிக்குச் செல்வதற்கு, ஒவ்வோர் படிக்கட்டாகக் கால்வைப்பது போலச் செட்டியாரும், ஒவ்வோர் தடவை பேசும் ஒவ்வொரு வாசகமாகத் தம் நிலையை உணர்த்துவிக்கக் கூறிவந்தார். குமரி, செட்டியாரிடம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று துளியும் எதிர் பார்த்தவளல்ல. ஆகவே அவர் பேசினதன் உட்கருத்தை அவள் உணர்ந்துகொள்ளவே இல்லை.

ஒருமுறை செட்டியார், தம் சோகநிலைமையைக் கூறினார். அவருக்குப் பரிந்துபேச விரும்பிய குமரி,

"ஆமாங்க, எனக்குக்கூடச் சொன்னாங்க, உங்க மகன் கதையை. யாரோ ஒரு துஷ்ட முண்டே, அவரைக்கெடுத்து விட்டாளாம்" என்றாள்.

"குமரி! அந்தப் பெண்ணைத் திட்டாதே. பெண்கள் என்ன செய்வார்கள்? அவன் அவள் மீது ஆசைகொண்டால், அவள் என்ன செய்வாள் பாவம்?" என்று செட்டியார், தம் மருமகள் சார்பிலே ஆஜரானார்! மற்றோர்நாள் "உன் அழகுக்கும் குணத்துக்கும், நீ எங்க ஜாதியிலே பிறந்திருந்தா, உன் தலையிலே, மணல் கூடையா இருக்கும்!" என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். மற்றும் ஓர் நாள், மார்பு வலிக்குத் தைலம் தடவும்படி சொன்னார். கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் 'கல்மிஷம்' அற்ற மனத்துடன் அவருடைய மார்புக்குத் தைலம் பூசினாள் குமரி. சதா சர்வகாலமும் அவள் நினைப்பு நெஞ்சிலே இருந்ததே தவிர, ஒருநாளும் அவள், அன்று அமர்ந்-