பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

43


எழுப்பாதே, யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே " என்று கேட்டாள்.

செட்டியார், மீனாவின் தந்திரத்தைத் தெரிந்து கொண்டார். ஆமாம் குமரி! மயக்கமாக இருந்தது; இப்போது இல்லை. மணி பத்து இருக்குமே பாவம், நீ தனியாகவா இங்கு வந்தே" என்று கேட்டார்.

ஆமாங்க! மீனா சொன்னதும் எனக்கு, வந்து பார்த்துவிட்டுப் போகணும்னு தோணவே, ஒரே ஒட்டமாக ஓடிவந்தேன். நான் போகிறேனுங்க" என்றாள் குமரி. செட்டியாருக்கு ஆபத்து என்ற உடனே ஓடி வந்துவிட்டாளே தவிர, அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், தனியாக அந்த நேரத்தில் அவருடன் இருப்பது சரியல்லவே, என்று தோன்றிற்று.

"ஏன், இந்த வேளையிலே தனியாக இருக்க........" என்று செட்டியார் கேட்டு முடிப்பதற்குள், குமரி வெட்கத்துடன், "அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க, நாம்ப இங்கே களங்கமற்றுத்தான் இருக்கிறோம்; ஆனா மத்ததுங்க அப்படி நினைக்காது பாருங்க" என்றாள். களங்கமற்ற நிலையில்தான் அவள் இருந்தாள். ஆனால் செட்டியாரின் மனநிலை அவளுக்குத் தெரியாது!

"வந்தாகிவிட்டது, குமரி! கொஞ்சம் அறையைச் சுத்தம் செய்" என்று கூறினார் செட்டியார். குமரி உடனே அந்தக் காரியத்தைச் செய்தாள். செட்டியாரே! நெல் மூட்டைகளை ஏன் இங்கேயே போட்டிருக்கிறீர்கள். எலிகள் அதிகமாகுமே" என்று கேட்டுக்கொண்டே, மூட்டைகள் இருந்த இடத்தைச்