பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

45


விளக்கல்ல, பல விளக்குகள் இருக்கக் கண்டாள்! எலி, மூட்டைகளிடையே ஓடக் கண்டாள்; குனிந்து, கோல் ஒன்று எடுத்து விரட்டினாள். எலி ஒரு பக்கமிருந்து மற்றோர் பக்கம் ஓடிற்று. குமரி, ஓடினா விடுவேனா அம்மாடி! எவ்வளவு சாமர்த்தியம்? ஆனால் இந்தக் குமரியிடமா நடக்கும்" என்று கூறிக்கொண்டே எலியை வேட்டையாடினாள். கடைசியில் எலி தப்பிக் துக்கொண்டே ஓடிவிட்டது. 'ஒரு சுண்டெலிக்கு எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தாயா?' என்று கேட்டாள். யாரும் எதிரிலே இல்லை. 'சே! யாரும் இல்லை இங்கே, யாரிடம் பேசுகிறோம்' என்று நினைத்தாள், சிரிப்பு பொங்கிற்று. சிரித்தாள். மேலும் மேலும் சிரித்தாள். உரத்த குரலிலே சிரித்தாள். இடையிடையே பாடவுமானாள், அறை முழுவதும் ஜோதிமயமாக அவளுக்குத் தெரிந்தது. குதூகலம் ததும்பிப் பொங்கி வழிந்தது. ஆடை நெகிழ்வதையும் கூந்தல் சரிவதையும் கவனியாமல் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள். குமரியின் கண்கள், உருள ஆரம்பித்தன! தூக்கம் வருவது போன்ற உணர்ச்சி - கருமணி மேல் இரப்பைக்குள்ளே போய் புகுந்துகொள்வது போல், மேலுக்குப் போகிறபடி இருந்தது; என்றுமில்லாத அசட்டுத்தனமான தைரியம். லேகியம் அவளை ஆட்டி வைக்க ஆரம்பித்தது; வார்த்தைகள் குழைந்து குழைந்து வெளிவரத் தொடங்கின. செட்டியார், அந்தச் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்தார். "குமரி!" "செட்டியாரே!" "ஏன் இப்படி இருக்கறே ?"