பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

குமரிக் கோட்டம்


நீ ஆயிரம் கோயில்கட்டி என்ன பிரயோஜனம்? உனக்குத் தாய், தங்கை, அக்கா, யாரும் கிடையாதா ? குமரி, எவ்வளவு களங்கமற்றவள், கொடியவனே! அவளை இக்கதிக்குக் கொண்டுவந்தாயே!" என்று சொக்கன் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டே, செட்டியாரைத் தாக்கினான்.

"சர்வேஸ்வரா! ஐயோ அப்பா! வேண்டாமடா. சொக்கா! நான் தாளமாட்டேண்டா, உயிர் போகிறதடா, உன் காலைக் குடும்பிடுகிறேனடா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்கிறேண்டா? அப்பா சொக்கா, நான் பாவிதான், என்னைக் கொல்லாதே என்று செட்டியார் கூவினார்.

"சொல்வதைச் செய்கிறாயா? ஆனால் கேள். குமரியைப் பலரறியக் கலியாணம் செய்துகொள்" என்று கர்ஜித்தான் சொக்கன்.

"கலியாணமா? ஐயோ: அடுக்காதே; என்றார் செட்டியார், கீழே வீழ்ந்துகிடந்த குமரியின் கூந்தலைப் பிடித்து அவளைத்தூக்கி நிறுத்தி, இது அடுக்குமா? இவளைக் கெடுத்துவிட்டு, பிறகு யார் தலையிலாவது கட்டுவது அடுக்குமா?" என்று சொக்கன் கேட்டான். குமரியின் கண்களிலே வழியும் நீரையும் கண்டார் செட்டியார்: இங்கே புனல், சொக்கனின் கண்களிலே அனல்; "ஆண்டவனே! நான் என்ன செய்வேன்?" என்று அழுகுரலுடன் கூறிக்கொண்டே தலையிலே அடித்துக்கொண்டார்.

"அக்ரமக்காரா! அடிக்கடி ஆண்டவனை ஏன் கூப்பிடுகிறாய்? அனாதைப் பெண்களை ஆலயத்திலே கற்பழிக்கும் உனக்கு ஆண்டவன் பெயரைக்கூடச்