பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

குமரிக் கோட்டம்


இங்கே கோயில்கொண்டுவிட்டார். ஏழைகளின் இல்லமாக இந்த இடம் ஆக்கப்பட்டபோதே இங்கு இறைவன், அபிஷேகமின்றி, ஆராதனையின்றி, வேதபாராயணமின்றி, தானாகச் சந்தோஷத்துடன் வந்து விட்டார்" என்றன் பழனி. மகனைக் கட்டி அணைத்துக்கொண்டு, "உன் அறிவே அறிவு! இப்படிப்பட்ட உத்தமனை நான், ஊரிலே உலவும் சில வைதிக உலுத்தர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இம்சித்தேன். நற்குணம் படைத்த நாகவல்லியைத் துன்புறச் செய்தேன்." என்று உருக்கமாகச் செட்டியார் பேசினார்.

"அப்பா! தாங்கள் தீர்மானித்தபடி சொத்து முழுவதும் கோயில் காரியத்துக்கே செலவிடப்பட வேண்டியதுதான். ஆலயம் கட்டும் வேலையும் தொடர்ந்து நடத்தவேண்டியதுதான்.... ..." என்று பழனி கூறிக்கொண்டே இருக்கையில், குழந்தைவேலர் குறுக்கிட்டு, "நம் சொத்தைப் பாழாக்கிக் கோயில் கட்டி, குலம் ஜாதி பேசி சமூகத்தைக் குலைத்துவரும் வைதிகர்களிடம் சொடுப்பதா?" என்று கோபத்துடன் கேட்டார். குழந்தைவேலர், சுயமரியாதை இயக்க வக்கீலானது கண்டு, பழனி களித்தான்.

"ஆலயம் கட்டவேண்டியதுதான் அப்பா. ஆனால் அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரக்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடகிவிட்டது, அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலைதான் பாக்கி. முடிந்தபிறகு, அதனை வௌவால் வாழுமிட மாக்கிவிடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கிவிடலாம். நாகா, வேறு பள்ளிக்கூடம் தேடவேண்டியதில்லை. பிராகாரம், சிறு