பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குமரிக்கோட்டம்


உத்தரியம் அணிந்து கொண்டு. அந்த ரோஜாமாலையுடன் நின்று, சபையோரை நோக்கிக் குழந்தை வேலச் செட்டியார் கும்பிட்டுக்கொண்டு நின்றபோது, நாயன்மார்போலவே இருந்தது. தாழையூர் சத்சங்கம் சனாதன மார்க்கத்தைப் பாதுகாக்க ஏற்பட்டது. அந்தச் சங்கத்தார் வெளியூரிலிருந்து வரவழைத்திருந்த வக்கீல் வாசுதேவசர்மா, உருக்கமான அந்தப் பிரசங்கத்தை செய்து விட்டு ரோஜாமாலையைச் செட்டியாருக்குப்போட்டதும், அவர் அடைந்த ஆனந்தம், இவ்வளவு என்று அளவிட முடியாது. வார்த்தைகள் சந்தோஷத்தால், சரியாக வெளிவரவில்லை.

"பிராமணோத்தமர்களே ! பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்ர, என்று பெரியவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஜாதி ஆச்சார முறைப்படி, அடியேன் வைசியகுலம். இந்தப் பாபியின் மகனாகப் பிறந்தவன், அந்த ஆச்சாரத்தைக் கெடுக்கத்துணிந்தான். பிரபஞ்சத்துக்கே நாசம் சம்பவிக்கக்கூடியது அதர்மம். அந்த அதர்மத்தைச் செய்ய, ஒரு மகன் எனக்குப் பிறந்தான்; நான் என்ன பாபம் செய்தேனோ, பூர்வத்தில். அவள் என்ன ஜாதியோ, என்ன குலமோ, ஒரு பெண், அவளைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்றான், தடுத்தேன்; எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை. கடைசியில், இந்த பாபக் கிருத்யத்துக்கு உடந்தையாக இருக்கும் மகாபாபம் நமக்குச் சம்பவிக்கக்கூடாது என்று தோன்றிற்று. நமது சர்மா அவர்கள் சொன்னது சத்யவாக்கு. எனக்குப் புத்ர சோகம் தாங்கமுடியவில்லை. ஆனாலும், மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, அவனை வீட்டை