பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிக் கண்டம்

அல்லது

கடல்கொண்ட தென்னாடு

க. குமரிநாடுபற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம்முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. இதில் இன்றைய அரசியற் பிரிவுமுறைப்படி ஏறக் குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆனால், முன் நாட்களில் தமிழ்நாட் டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன.

மிகப் பழைய இலக்கணங்களிலும் நூல்களி லும் உரைகளிலும் குமரிமுனைக்குத் தெற்கே நெடுந் தொலை நிலமாயிருந்தது என்றும், அந் நிலப்பகுதி பல்லூழிக் காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்டதென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

இப் பரப்பிலிருந்த நாடுகள், அரசுகள், மலை கள், ஆறுகள் ஆகியவற்றைப்பற்றிய குறிப்புக்களும், விவரங்களும் சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. ஆங்கிருந்த மலைகளுள் குமரிமலை ஒன்று என்றும், ஆறுகளுள்