பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தற்கால நாகரிகமும் இலெமூரியரும்

89

கின்றது. இதற்கு நாம் முற்கூறிய செய்தியோடுகூட அவர்களது நெடுங்கால நடைமுறை யறிவும் ஒரு காரணமாகும். நமது தற்கால மேல்நாட்டு நாக ரிகம் சில நூற்றாண்டுகளே பழைமையுடையது. அதற்கு அடிப்படையாயிருந்த கிரேக்க உரோம் நாகரிகங்கள் கூட இரண்டுமூன்றாயிர ஆண்டுகளுக்கு முந்தியவை யல்ல. இந்த அளவில்கூட இந் நாகரிகம் ந் முழுத் தன்னாட்சி (சுதந்தரம்) உடையதன்று.ஏனெ னில் இலெமூரிய நாகரிகத்தின் கிளைகளாகிய இந்திய நாகரிகம், செமித்திய நாகரிகம் இவற்றின் பல பகுதிகளை அது பல காலங்களில் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. நாகரிகம் தன்னாட்சியுடன் ஒரு நூறாயிர ஆண்டு முதல் இரண்டு நூறாயிர ஆண்டுவரையிற் பயின்ற தொன்றாம்.

இதற்கு மாறாக, இலெமூரிய

3

1

இந் நடைமுறை யறிவால் தற்காலத்தவருக்குத் தெரியாத பல மூலப்பொருள்களும், கருப்பொருள் 2 களும், ஒண்பொருள்களும் அவர்களுக்குத் தெரிந் திருக்கவேண்டும். அவற்றுள் நீரை விலக்கும் ஆற்றல் வாய்ந்த கல் ஒன்றும், பேரொளிகள் தரும் ஆற்ற லுடைய ரேடியம் என்றதற்கான புதிய பொருளோ அல்லது அதுபோன்ற பிறிதோர் ஒண் பொருளோ ஒன்றும், தற்காலப் பூச்சுமண்ணை (ஸிமென்டை)ப் போல் மண்ணை உறுதி செய்யக் கூடிய வெண் கற்பொடி ஒன்றும் தலைமையானவை என்று முன்னர்க் கூறியுள்ளோம்.

4

இவற்றின் உதவியால் அவர்கள் பலவகை ஊர் தி களும், வான ஊர்திகளும், உறுதியான பாதைகளும் 1 Elements. 2 Minerals. 3 Metals. 4 Cement.