பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

குமரிக் கண்டம்

அமைத்தனர். மூலப்பொருள்களின் அறிவாலும், பொருள்களின் ஒப்பநிலை 1 அறிவாலும், மரக்கட்டை களைப் பாதுகாத்து வைக்கும் அறிவாலும், அவர்கள் 30,000 ஆண்டளவும் அழியாத கட்டிடங்களும் கோவில்களும் நிறுவினர். அவர்களது ஒளியறிவு மிகுதியால் தற்காலத்தாரால் வியக்கத்தக்க வண்ணம் பல நூறு கல் தொலைவரை ஒளிவீசும் விளக்கங்களை அவர்கள் உண்டுபண்ணி இரவைப் பகலாகச் செய் திருந்தனராம். கலைகளிலும் ஓவியத்திலும் மற்றும் அவர்களது திறன் தற்காலத்தவர் அழுக்காறடையத் தக்கதாகவே இருந்தது.

ஆனால் இத்தனைத்திறனும் மனித ஆக்கத் துறை யில் சென்றதேயன்றி அழிவுத் துறையில் செல்ல வில்லை. அத்லாந்திய நாகரிக காலத்திலும், அதன் பின் செமித்தியர் நாளிலும் மக்கள் ஒருவரோடு ஒரு வர் போர்த்திறங்காட்டி அழிவு செய்தபடி அவர்கள் செய்யவுமில்லை; செய்ய முயலவுமில்லை. தம்மைச் சுற்றியுள்ள பெரிய விலங்கினங்கள் பாம்புகள் இவற்றிலிருந்துகூட அவர்கள் தப்பி ஒதுங்கி நிற்க முயன்றனரேயன்றி அவற்றை அழிவுசெய்ய முற் பட்டதாகத் தெரியவில்லை.

A

அழிவுத் திறன் மிகுந்த நாகரிக காலங்களிலே தான் கோட்டை கொத்தளங்களும்,பெரு நகரங் களும் மிகுந்திருக்கும். அத்லாந்திய நாகரிகம் இத் தகையதே. ஆனால் இலெமூரியாவில் வீடுகளும் ஊர் களும் மனித வாழ்க்கைநல மொன்றையே நோக்க மாகக்கொண்டு, தற்கால மலையாள நாட்டு வீடுகளைப் போன்று, டைவெளிகளும் சோலைகளும் விட்டுக்

1 Balance.