பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தற்கால நாகரிகமும் இலெமூரியரும்

91

கட்டப்பட்டவையேயாகும். ஆங்காங்குள்ள சில நக ரங்களும் வாணிபத் துறைகள் அல்லது தொழில் துறைகளாகவே அமைந்திருந்தன.

இன்று இலெமூரியர் நாகரிகத்தைப்பற்றி நாம் அறிய உதவும் கட்டிடங்கள் அவர்கள் கோயில்கள் மட்டுமே யாகும். அவர்கள் ஊர்களும் வீடுகளும் இன்றைய ஜப்பானியர் வீடுகளைப்போல் எரிமலை, நில அதிர்ச்சி முதலியவை காரணமாக அழியும் பொருள்க ளாலேயே கட்டப்பட்டன. இலெமூரியர் உலகியல் வாழ்வில் பற்றுக் குறைந்திருந்ததும் இதற்கு இன் னொரு காரணம். தமிழரும் இதே கருத்துடையர் என்பதைத் தமிழ் மூதாட்டியார் "இடம்பட வீடெ டேல் ” என்று கூறியிருப்பதனால் அறிக.