ய. இலெமூரியாவும் தமிழ்நாடும்
இதுகாறும் இலெமூரியர்களைப்பற்றி வரைந்த குறிப்புக்களால் இலெமூரியாவிற்கும் தமிழ் நாட் டிற்கு முள்ள இன்றியமையாத்தொடர்புகள் எளிதில் விளங்கத்தக்கவையே யாயினும், முடிவுரையாக ஈண்டு அவற்றைத் தொகுத்துக் கூறுகிறோம்.
முதன் முதலாகத் தமிழ் நூல்களின் பழைமையும் தமிழ் நூல்களிற் குறிப்பிட்டுள்ள முச்சங்கங்களின் பழைமையும், வடமொழி நூலாகிய வால்மீகரது இராமாயணத்தாலும், புராணங்களாலும் நன்கு வலி யுறுத்தப்படுகின்றமையோடு தற்கால ஆராய்ச்சி நூல்களான ஞால் நூல், நிலநூல், ஆவிமண்டல நூல் முதலியவற்றுடன் முற்றும் பொருத்தமுடையன என்றும் காட்டப்பட்டது.
.
உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெ மூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக்கண்டம் அவ் விலெமூரியாவாகவோ அல்லது அதன் பகுதியாகவோ இருக்கவேண்டும் என்பதும், அவ் விலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடிகொடி இனங்களும், ஊர் வன, பறப்பன, நடப்பனவாகிய உயிரினங்களும் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன என்பதும் அந் நூல்கள் நமக்கு எடுத்துக் கூறும் உண்மைகளாகும்.
இவையேயன்றி, இலெமூரியர் நாகரிகம், சமயம், ஒழுக்க நிலை முதலியவற்றைப்பற்றி நாம் எடுத்துக் கூறியவற்றுள்ளும் எத்தனையோ செய்திகள் இன்