பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரியாவும் தமிழ்நாடும்

93

றைய உலகில் தமிழ் நாட்டினர்க்கே சிறப்பாக உரியவை என்பது போதரும். அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றைமட்டுமே இங்கே விதந்துரைக்க எண்ணு

கிறோம்.

இலெமூரிய மக்களுக்கு நெற்றியில் கண் போன்ற ஓர் உறுப்பு உண்டு என்பது தற்காலத்தவர்க்கு எவ் வளவோ புதுமையான, நம்புதற்கரிதான செய்தியாயி னும், தமிழர் தெய்வங்களின், அவற்றிலும் சிறப்பாகச் சைவசமயச் சார்பான சிவன், பிள்ளையார், முருகன், காளி ஆகிய பழந் தமிழ்த் தெய்வங்களின், உருவ அமைப்புக்களுள்ளும் இதே உண்மை வலியுறுத்திக் கூறப்படுவது உற்றுநோக்கத்தக்கது. (இத் தெய் வங்களின் முகங்கள் ஐந்து, ஆறு என மாறிய விடத் துங்கூட இம் மூன்றாவது கண் அல்லது நெற்றிக் கண் ன்றியமையாது வேண்டப்படுவது காண்க.)

இக் கண்ணின் இயல்பை நோக்க இவ் வியைபு இன்னும் நுட்பமானது என்பது காணலாம். ஐம் புலன்களிலும் சிறப்புடையது கண் ஆதலின், இவ் வுறுப்பு நெற்றிக் கண் என்று பெயர் கொண்டதாயி னும், உண்மையில் இது கண்ணோ, அல்லது ஐம்புலன் களுள் ஒன்றோ அன்று; அவ் வைம்புலன்களையும் உள்

டக்கி, அவற்றிற்கும் அப்பாற்பட்ட ஓர் ஆறாம் அறிவின்பாற்பட்டது. (தொல்காப்பியர் இத்தகைய ஆறாம் அறிவு தெய்வப் பிறவிக்கேயன்றி மக்கட் பிறவிக்கும் இன்றியமையாப் பண்பாகக் கூறினார்.) இவ் வறிவைப் பற்றிய கருத்துத் தமிழரிடை வெறுங் கட்டுக் கதையோ புனைந்துரையோ அன்று. அடிப்படையான இன்றியமையாத பழைய

உண்

மையே என்பது அதற்கெனத் தமிழில் வேறெம்