94
குமரிக் கண்டம்
மொழியிலும் இல்லாத ஒரு தனிப்பட்ட நுண் கருத் துடைய சொல் இருப்பதனால் அறியலாம். அதுவே உ என்ற மூன்றாம் சுட்டு ஆகும். இஃது இம் மூன் றாம் கண்ணாற் காணப்படும் பொருள்களை - அதாவது பருப்பொருள்களுள் மற்ற இரு கண்களுக்கும் மறைந்தவற்றையும் (பின் உள்ளது, மேல் உள்ளது, தொலையிடத்தும் முக்காலத்தும் உள்ளது ஆகியவற் றையும்) நுண்பொருள்களையும் குறிப்பது என்பது யாவரும் அறிந்ததே.
இரண்டாவதாக, இறந்தவரை உடலழியாமல் தாழியில் அடக்கிவைப்பது இலெமூரியர், எகிப்தியர், தமிழர் ஆகிய மூவர்க்கு மட்டுமே சிறப்பான பண் பாம். இஃதன்றி இலெமூரியரிடை வழங்கிய உடலி னின்று உயிரைப் பிரிக்கும் முறையையும், உடலை நீண்ட நாள் கெடாது வைத்திருக்கும் முறையையும் நோக்குவோர், தமிழரிடை வழக்காற்றிலிருந்த வடக் கிருத்த 'லையும் சித்தர் காயகற்ப முறையையும் எண்ணாதிருக்க முடியாது.
நாட்டின்
(தமிழ் தனிப்
இலெமூரியரிடையேயும், தமிழரிடையேயும் பெண்கள் அடைந்திருந்த உயர்வு அதனைப்பற்றிப் பறைசாற்றி வரும் இந் நாளைய மேல் ரிடையே கூட இல்லை எனல் மிகையாகாது. நாட்டில் பெண்கள் ஒளவையார் முதலிய பெரும் புலவராகவும், மங்கையர்க்கரசி போன்ற அரசியல் தலைவராகவும், திலகவதியார், சூடிக்கொடுத்த நாச்சியார் முதலியோர் போன்ற சமயத் தலைவராக வும் இருந்தனர்.)
இவ் வகையில் இன்னொரு சுவை தரும் பொது உளது. உலகின் மற்றெல்லா வகை
உண்மை