இலெமூரியாவும் தமிழ்நாடும்
உலகின் முழுமுதற்
95
மக்களிடையேயும் பொருள் ஆண்பாற் சார்புடையதாகவே கொள்ளப்பட்டிருக்க, மேற்கூறிய (இலெமூரியர், எகிப்தியர், தமிழர் ஆகிய) மூவரிடை மட்டும் அது பெண்பாற் பொரு ளாகத் தாயுருவிலும் வழிபடப்படுகிறது. சைவரிடை அம் முழுமுதற்பொருள் இன்னும் அம்மையப்ப ருருவில் இருபாலும் ஒருபாலாக வணங்கப்படுதல் காண்க.
இயற்கையை இலெமூரியர் இக் காலத்தவரை விடப்பன்மடங்கு மிகுதியாக அறிந்திருந்தும் அதனைத் தன்னலத்திற்காகவோ உலக அழிவிற்காகவோ பயன் படுத்தாமல் ஆக்கமுறையிற் பொது நலத்திற்காக மட்டுமே பயன்படுத்தியதை ஒருபுறமும், கிட்டத்தட்ட அதே முறையில் அமைந்துள்ள சித்தர் முறையை மற்றொருபுறமும் ஒப்பிட்டு நோக்குபவர்க்கு அவ் விலெமூரியரில் மீந்து நின்றவரே சித்தராயினரோ என்ற ஐயம் எழாதிராது.
இன்னொரு சுவை தரும் பொதுமைப் பண்பு இலெமூரியரிடையும், இன்றுவரைப் பழந்தமிழரான மலையாளத்தாரிடையும், கிழக்கிந்தியத் தீவுகள் பலித் தீவுகள் முதலியவற்றிலுள்ள மக்களிடையும் காணப் படும் தாய்வழி உரிமையாம். இன்றும் இவ் வுரிமை யைக் குறிக்கும் தாயம் என்ற பழந்தமிழ்ச்சொல் வட மொழிச் சட்ட நூல்வரைச் சென்று தாய பாகம்’ என வழங்குதல் காண்க.
இன்னும் வாழ்க்கை அமைதி, சமயக் கொள்கை, கோயி லமைப்பு, ஒழுக்க நிலை முதலிய பலவகைகளி லுங்கூடப் பழந்தமிழர் இலெமூரியரையும், எகிப்தி யரையும், அமெரிக்க மயநாகரிக மக்களையும் பல நுண்