2
குமரிக் கண்டம்
குமரி, பஃறுளி இவை தெரிகின்றன.
தலைமையானவை என்றும்
இந் நாடு தமிழகத்தின் ஒரு பகுதிமட்டுமன்று; தமிழரினம், தமிழ் நாகரிகம் என்பவற்றின் தாயகம் என்றே கூறவேண்டும். ஏனெனில், தமிழைத் தொன்றுதொட்டு வளர்த்த சங்கங்கள் மூன்றனுள், தலைச் சங்கம் நடைபெற்ற தென்மதுரையும் இடைச் சங்கம் நடைபெற்ற கவாடபுரமும் இக் குமரிப் பகுதி யிலேயே இருந்தன.
எனவே, தலைச்சங்க காலமாகிய முதல் ஊழியி லும் இடைச்சங்க காலமாகிய இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும் இக் குமரிப் பகுதியிலேயே தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழிவளர்ச்சியும் ஏற் பட்டன என்பதும், தெற்கிலிருந்து கடல் முன்னேறி வரவர அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்ற னர் என்பதும் விளங்குகின்றன.
தமிழ்நூல்களில் மூன்று கடல்கோள்களைப் பற் றித் தெளிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன.
முதல் கடல்கோளால் பஃறுளியாறும் குமரிக் கோடும் கடலில் கொள்ளப்பட்டன. பஃறுளி யாற் றின் கரையிலிருந்த தென்மதுரையே பாண்டியன் தலைநகரும், தலைச்சங்க மிருந்த இடமும் ஆகும். இக் கடல்கோள் நிகழ்ந்த காலத்திருந்த பாண்டியனே நெடியோன் என்று புறநானூற்றிலும், நிலந்தரு திரு விற் பாண்டியன் என்று தொல்காப்பியப் பாயிரச் செய்யுளிலும் குறிக்கப்பட்டவனாவன்.
கடல்கோளின் பின்னர் இவன் வடக்கே போய்க் கவாடபுரத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். இங்கேதான் இடைச்சங்கம் நடை
டைச்சங்கம் நடைபெற்றது.