பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிநாடுபற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்

தலைச்சங்க நாட்களில், பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி அளவிலும் சிறப் பிலும் பாண்டி நாட்டின் மிகச்சிறந்த பாகமாயிருந் திருக்க வேண்டும். அது 49 நாடுகளாக வகுக்கப்பட் டிருந்ததென்றும், இரண்டு ஆறுகட்கு மிடையே 700 காவத அளவு அகன்று கிடந்ததென்றும் அறிகிறோம். இரண்டாவது கடல்கோளால் கவாடபுரம் கடல் கொள்ளப்பட்டது. அதன்பின் சிலகாலம் மணவூர் தலைநகராக இருந்தது. பின் மூன் றாம் முறைக் கடல்கோளால் அம் மணவூரும், குமரி யாறும் அழியவே, பாண்டியன் மதுரைவந்து அங்கே கடைச்சங்கத்தை நிறுவினான்.

பாண்டியன

சிலப்பதிகாரத்தில் மாடலன் குமரி யாற்றில் நீரா டியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கதை முடிந் ததன்பின் எழுதப்பெற்ற பாயிரத்தில் தொடியோள் பெளவ மெனக் குமரி கடலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு காலப்பகுதிகளுக்கிடையே, அதாவது கோவ லனிறந்து சில நாட்களுக்குப் பின்னாகக் குமரியாறு கடல் கொள்ளப்பட்டுக் குமரிக் கடலாயிற்று என்பர் பேராசிரியர்.

குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட் டியே மணிமேகலையுட் கூறப்பட்டபடி காவிரிப்பூம் பட்டினம் கடல் வயமானது. வங்காளக் குடாவில் உள்ள சில பெரிய தீவுகளும் இதனுடன் அழிந்திருக்க வேண்டும். "நாகநன் னாட்டு நானூ றியோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்" என்றது காண்க.

இதனோடு, மேற்குத் தொடர்ச்சிமலை இன்று கட லிருக்கும் இடத்திலும் தொடர்ந்து கிடந்ததென்றும்,