4
குமரிக் கண்டம்
ஆண்டு அதற்கு மகேந்திரம் என்பது பெயர் என்றும் வடநூல்கள் கூறுகின்றன. ராமாயணமும்
அனுமான் கடல் தாண்டியது மகேந்திர மலையி லிருந்தே யென்றும், அது பொதிகைக்கும் கவாட் புரத்திற்கும் தெறகில் இருந்ததென்றும் விவரித் துரைக்கின்றது.
முருகன் சிவன் முதலிய தமிழ்த் தெய்வங்கள் மகேந்திர மலையில் உறைந்தனர் என்றே தமிழர் முத லில் கொண்டனர். கடல்கோளின்பின் அவர்களது இடம் அன்றைய தமிழ்நாட்டின் வடக்கில் இருந்த மேலைத்தொடர் என்று கொள்ளப்பட்டு, வடமலை ஆயிற்று. நாளடைவில் வடமலை என்பதே மேரு என்றும் கயிலை என்றும் கருதப்பட்டது. சிவதரு மோத்தரததில் குறிப்பிட்டுள்ள உன்னதத் தென் மயேந்திரம் இதுவே என்க. திருவாசகத்தில்,
மன்னு மாமலை மகேந்திர மதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்
என்று இதனையே மணிவாசகப் பெருந்தகையார் ஆக மங்களருளிய இடமாகக் குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாட்டின் தென்கரை மட்டுமன்று, அதன் கீழ்க்கரையும் இலங்கையுங் கூடப் பல சிறு கடல் கோள்களுக்கு உட்பட்டன என்று தோன்றுகின்றது. வடமொழி வானநூலார் தமது உலக நடுவரையை இலங்கையில் ஏற்படுத்தினர். ஆனால் இன்று அஃது இலங்கைவழிக் செல்லாமல் கடலூடு செல்வதி லிருந்து, அந்த இடம் முன்பு இலங்கையைச் சார்ந் திருந்ததென்று உய்த்துணரக்கிடக்கின்றது.
1 Meridian.