பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிநாடுபற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்

5

மேலும் கேள்வியறிவால் தென் இந்தியாவைப் பற்றி எழுதும் மெகஸ்தெனிஸ்' என்ற கிரேக்க அறிஞர் இலங்கையைத் தாப்பிரபனே" என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஓர் ஆறறினால் பிரிக்கப்பட் டுள்ளது என்றும் கூறி யிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபர்ணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும்.

கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கையின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக்கிடந்த ஒரு சிறு தீவேயாகும்.

கிழக்குக்கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறி னோம். புதுச்சேரிக்குமேற்கே பாகூர்ப்பாறையிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலு காதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால் இன்று அது கடலிலிருந்து ஒருகாதமே விலகியிருப்ப தால் கடல் 3 காதம் உட்போந்ததென்பது விளங்கும்.

சீகாழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும், மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறிவர, பாண்டி யன் வேல் எறிந்து அதனை மீண்டும் சுவறச் செய் தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியா குமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களுள் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்துகொண்டிருப்பதாகச் சொல் லப்படுவதும் தமிழ்நாட்டு கடல் பலகால் புகுந்து அழிவு செய்த தென்பதைக் காட்டுவனவாகும்.

தலை இடை கடைச் சங்கங்களில் இன்னின்ன புலவர்கள் இருந்தனர், இன்னின்ன நூல்கள் செய் 1 Megasthanes. 2 Taprabane.