பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

குமரிக் கண்டம்

தனர், இன்ன இலக்கணம் கையாளப்பட்டது என்ற விவரங்கள் இறையனாரகப்பொருளுரையிலும், பிற நூல் களிலும் கூறப்படுகின்றன.

கடல்கோள்கள் காரணமாகவும், போற்றுவாரற் றும் அந்நாளைய நூல்களுள் பல இறந்துபட்டன. கடைச்சங்கப் புலவர்கள் காலத்திலும், ஏன், பிந்திய நாட் புலவர்கள் காலத்திலுங்கூட, இவற்றுட் பல நூல்கள் முழுமையாகவோ பகுதியளவிலோ நிலவி யிருந்தன என்பது அவர்கள் குறிப்புக்களாலும் மேற் கோள்களாலும் அறியக்கிடக்கிறது.

இங்ஙனம் தலைச்சங்க இடைச்சங்க நூல்கள் மிகுதியாக அழிந்துபோக, நமக்கு இன்று மீந்துள்ளது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலொன்றேயாகும். அகத்தியம் முதலியவேறு பலநூல்களுக்கு மேற்கோள் கள் வாயிலாகச் சில சில பாக்களோ அல்லது குறிப்பு வாயிலாகப் பெயர்மட்டிலுமோ கிடைக்கின்றன.

ஆன்றோர் உரையும், முன்னோர் மரபும் இங்ஙனம் தெளிவாகச் சங்கங்களது வரலாற்றையும் குமரிநாட் டின் மெய்ம்மையையும் வலியுறுத்துகின்றன ; ஆயி னும் இக்காலத்தார் சிலர் இவற்றை ஐயுறத்தொடங்கு கின்றனர். இந்நூல்களில் சங்கங்கள் நடைபெற்ற தாகக் கூறும் கால எல்லை ஆயிரக் கணக்காயிருப் பதும், அவை தரும் நூற்பட்டிகையுள் பெரும்பாலன இன்று காணப்பெறாமையுமே இவ் வையப்பாட்டிற் வ் குக் காரணமாவன.

தமிழ நாகரிகத்தின் தொன்மையைக் கணித்தறி வார்க்கு இச் சங்க வாழ்வின் எல்லை அவ்வளவு நம்பத் தகாததன்று. இன்று வட நாட்டில் ஹரப்பா

1

Harappa.