குமரிநாடுபற்றிய தமிழ்நூற் குறிப்புக்கள்
7
கண்ட
மொஹெஞ்சொ தாரோ முதலிய இடங்களில் கல்வெட்டுக்களால் தமிழர் நாகரிகம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரேயே இந்திய நாடு முழுமையும் பரவியிருந்தது என்பது புலனா கின்றது.
அதோடு அவற்றைப்பற்றிய குறிப்புக்கள் காலத் தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்ட வேறுவேறான பல நூல்களிலும் ஒன்றுக்கொன்று முரணாகாமல் பொருத்தமாகவே கூறப்பட்டிருக்கின்றமையும், தமிழ் நூல்களேயன்றி வடநாட்டு நூற் குறிப்புக்களும் பண் டைய கிரேக்க அறிஞர்தங் குறிப்புக்களும் சங்க வரலாற்றைப் பல இடங்களில் வலியுறுத்துகின்றமை யும், தற்கால மேனாட்டு ஆராய்ச்சி யுரைகளும், கண் கூடான பல நடைமுறை யறிவுகளும் சேர்ந்து இச் செய்தி வெறும் புனைந்துரையன்று, மரபு வழக்காக வந்த மிகப் பழமையானதொரு செய்தியே என்பதை மெய்ப்பிக்கும்.
சி
வடமொழிச் சான்றுகளுட் சிலவற்றை முன்பே குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் மறுக்கக்கூடாத தெளிவான சான்று முதல் கடல்கோள் பற்றிய தாகும். அக் கடல்கோளுக்குத் தப்பி நின்று திரும் பத் தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டிய நிலந்தரு திரு விற் பாண்டியனைத் திராவிட நாட்டரசனாகிய சத்திய விரதனென்றும், அரசமுனி என்றும், மனு என்றும் வடநூல்கள் பலவாறாகக் கூறின.
ஊழி வெள்ளத்தி னின்றும் தப்பி அவனது பேழை தங்கிய இடம் பொதிகை மலை ஆகும். இதனையே வடமொழியாளர் மலயமலை என்பர். 1 Mohenjo-Daro.