இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
குமரிக் கண்டம்
இஃது அன்றையப் பாண்டின் பெரும் பகுதிக்கும் வடக்கே இருந்ததால் வடமலை என்னப்பட்டுப் பின் பெயர் ஒற்றுமையால் மேருவுடன் வைத்தெண்ணப் பட்டது.
இவ் வெள்ளக் கதைகள் பல புராணங்களிலும் காணப்படுபவை, அன்றியும் இராமாயணத்தில் இரண்டாம் ஊழியில் மணிகளாலும் முத்துக்களா லும் நிரம்பப் பெற்றுச் சிறப்புடன் விளங்கிய பாண் டியன் தலைநகரான கவாடபுரத்தைப் பற்றியும், மகா பாரதத்தில் அதன்பின் மூன்றாம் ஊழியில் தலைநகரா யிருந்த மணவூரைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருப் பதுங் காண்க.
இங்ஙனம் இயற்கைச் சான்றுகளும், தென் மொழி வடமொழி மேற்கோள்களும் ஒரே முகமாக நிலைநாட்டும் இவ்வுண்மையை எளிதில் மறுக்கவோ புறக்கணிக்கவோ இயலாது.
பின்வரும் பிரிவுகளில் மேல்நாட் டறிஞர் பல் வேறு ஆராய்ச்சித் துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து இதே முடிவை ஏற்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுவோம்.