உ.மொழிநூல் முடிவு
மனித நாகரிகத்தின் பழமைபற்றிய செய்திகளை ஆராய்ந்து முடிவுகட்டும் வகையில் பல அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. ஆயினும் முதன்முதலாக அத் துறையில் வழிகாட்டியாய் நின் றது மொழியியல் என்றே கூறவேண்டும்.
உலகிலுள்ள பல மொழிகளையும் பயின்று ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகள் மூலம் அவற்றைக் கோவைப்படுத்துவது மொழியியலார் போக்கு. அங்ஙனம் செய்தோர் பலரும், உலகில் தென் இந்தியா தொடங்கிப் பல பக்கங்களிலும் நெடுந் தொலை பரந்து கிடக்கும் மொழிக்கோவைகள் பல உள்ளன என்று கண்டனர்.
அவற்றுள் ஒன்று தென் இந்தியா முதல் இங்கி லாந்து நாட்டிலுள்ள வேல்ஸ்வரை ஒரே கோவை யாய்க் கிடக்கின்றது. க் கோவையை அறிஞர் ஆரிய இனம் என்றனர்.
இவ் வாராய்ச்சியை யொட்டிப் பலர் மனித நாக ரிகம் அவ் ஆரிய இனத்தார் முதலில் இருந்த இடத்தி லிருந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சென்று பரந் தது எனக் கொண்டனர். ஆரியர் முதலிடமும் இதற் கேற்ப நடு ஆசியா அல்லது தென் உருசியா என்று கொள்ளப்பட்டது.
பால கங்காதர திலகர் என்ற வரலாற் றறிஞர், மனிதர் முதலிடம் நடு ஆசியாவு மன்று; தென் உருசி யாவு மன்று, வடதுருவப் பகுதியே என்று பல சான்று சளுடன் காட்டினர்,
1 Philology.