10
குமரிக் கண்டம்
இக் க கொள்கை ஆரிய இனத்தைப்பற்றிய வரையில் ஒவ்வுமாயினும், மனித நாகரிகத்தின் தொடக்கத்திற்குப் பயன்படாதாயிற்று. ஏனெனில், ஆரிய இனத்தார் வந்த இடங்கள் பலவற்றுள் அவரி னும் உயர்ந்த நாகரிக முடைய மக்கள் வாழ்ந்து வந் தனர் என்பது தெளிவாகக் காணப்படுகின்றது.
கிரேக்க நாட்டில் முகைனிய நாகரிகமும் ஐகய நாகரிகமும் கி.மு.3000 ஆண்டுமுதல் மேலோங்கி யிருந்தன. இந்தியாவில் திராவிட நாகரிகத்தின் சிறப்பை வான்மீகியார் இராமாயணமும் இருக்கு வேத உரைகளும் ஏற்கின்றன.
ஆரிய இனக்கோவையே யன்றி வேறு பல கோவைகளும் தென் இந்தியாவரை எட்டுகின்றன என்று மேலே கூறினோம். எனவே, நாகரிகம் தெற்கி லிருந்து வடக்குநோக்கி ஏன் சென்றிருக்கக் கூடாது என்பதும் ஆராயத்தக்க தொன்றாகும்.
மொழியியல் ஆராய்ச்சி இத்தகையதோர் கொள் கையை எழுப்பப் போதியதாயினும் அதன் உண் மையை நிலைநாட்டப் போதிய சான்றுகளை உடைய தன்று. மேலும், மொழிக் கோவைகளது போக்கால் மொழித் தொடர்பு இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியுமேயன்றி, அத் தொடர்பின் போக்குத் தெற்கினின்றும் வடக்கு நோக்கியதா, வடக்கு நின்றும் தெற்கு நோக்கியதா என்பதை வரையறுக்கமுடியாது.
இந் நிலையிலேதான் வான நூல்,ஞாலநூல், நில நூல்,"ஆவிமண்டல நூல் முதலிய அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. இவை யனைத்தும் ஒரே
'Mycaenian. 2Aegean. * Astronomy. 4 Geology.
5Geography. "Meteorology.