மொழி நூல் முடிவு
11
முகமாக உலகில் மிகப் பழைய பகுதியும், நாகரிகத் தொடக்கம் ஏற்பட்ட இடமும் தென் இந்தியா அல் லது அதற்கும் தெற்கில் இருந்த இலெமூரியா ஆகவே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
ஆயினும் உண்மையை நிலைநாட்டும் வகையில் மொழி இயல் ஆராய்ச்சியால் ஏற்படும் துணை கொஞ்ச நஞ்சமன்று. எடுத்துக்காட்டாக இந்தியாவில் ஆரி யர் நாகரிகத் தாக்கு மிகவும் குறைவு; திராவிடர் நாக ரிகத் தாக்கே பெரும்பான்மை என்பதை, அண்மை யில் சிந்துநாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட் டுக்கள் காட்டுவதற்கு முன்னமே, தெளிவுபட
உணர்த்தியது மொழியியலே.
கற் காலம் "1 என்ற தலைப்புக் கொண்ட நூலில் திரு. பி. டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், 'மொழி ஒப்புமையால் நோக்கத், தென் இந்திய மொழிகள் மட்டுமல்ல, வடஇந்திய மொழிகளும், வடமொழியுங் கூடச் சொற்பயன், சொற்றொடர் அமைப்பு முதலிய வகைகளில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இம் மொழிகளுள் ஏதாவதொன்றினின்றும் இன்னொன் றுக்கு மொழிபெயர்க்க வேண்டுமாயின் அகரவரிசை யின் துணைகொண்டு மொழிக்கு மொழி மாற்றினால் போதும்' என்று கூறுகிறார்.
ய
இவ் வகையில் வட இந்திய மொழிகள் பிற ஆரிய மொழிகள் போலாமை நோக்க, அவற் றின் அடிப்படைச் சட்டம் வடமொழியோ ஆரி யமோ அன்று; பழந் தமிழ் அல்லது திராவிட மூல மொழியே யாகும் என்பது வெள்ளிடைமலை.இன் னும் சற்று நுணுகி நோக்கினால் வட நாட்டார் தம் 1 Stone Age.