12
குமரிக் கண்டம்
மூலமொழி எனக் கொண்ட வடமொழிதானும் திரா விடத்தாக்கு உடையதே என்பது தெரியவரும்.
எச்சங்களையாளுதல்,
மேலும் மொழி இயலின் தந்தை என்று புனைந்து கூறப்படும் பேரறிஞர் கால்டுவெல் அவர்கள், திரா விடமொழிகள் சித்திய' மொழிகளுடன் இன்றி யமையா உறவுடையது என்று கூறுகிறார். அதாவது நான்காம் ஆறாம் வேற்றுமை யுருபுகள், உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, எதிர்மறை வினை, தழுவும்சொல் முந்திநிற்றல், எச்சங்களே உரிச்சொல்லாக நிற்றல், வினைத்தொடர்ச்சியினிடமாக உயிரிடைப்பட்ட வன்மை திறந்த உயிர்ப்புடைய மென்மை இனமாக மாறி ஒலித்தல், நாவடிமெய் களாகிய ட ண ள உடைமை, சுட்டு, எண், இடப் பெயர் முதலியவை இம் மொழிகளுள் ஒற்றுமை காணப்படும். சித்திய இனம் ஆசியா ஐரோப்பா முழுமையினும் பரந்து கிடப்ப தால் திராவிட இனத்தின் தொடர்பும் இவ்விரு கண் டங்களையும் தழுவியுள்ளதென்று பெறப்படுகிறது.
டணள
உடையவையாகக்
பேரறிஞர் போப்பையர்,தமிழ்,ஐரோப்பிய மேலை நாடுகளில் உள்ள கெல்த்திய தெயுத்தானிய மொழி களை ஒத்திருக்கின்றது என்கிறார். இவ்விரண்டு இனங் களும் ஆரிய இனத்தின் மிகத் தொலைவுக் கிளைகள் என்பர். இன்னும் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய அமெ ரிக்க மொழிகளும் வியக்கத்தக்க முறையில் தமிழ்க் குழுவை ஒத்துள்ளன' என்று அறிஞர் கூறுகின்றனர். இதனால் தமிழ்க்குழு உலக முழுமையும் உற - வுடையது என்பது பெறப்படுகிறது.
1 Dr. Caldwell. 2 2 Scythian.
5 Teutons.
3 Dr. U. Pope. 4 Celts.