பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




௩. தென் இந்தியாவின் பழமைக்கான சான்றுகள்.

1

நில நூல்களை மேற்போக்காகப் பார்ப்பவர் களுக்குக்கூடச் செடிகொடி வகைகளிலும்,உயிர் வகைகளிலும் செழித்து, மனிதநாகரிகப் பழமை வகையிலும் மிகச் சிறந்து விளங்குவது நடுக்கோட் டுப்பகுதியே' என்பது விளங்கும். இதுவே உயிர் வகைகள் பெருகுதற்கேற்ற தட்ப வெப்ப நிலைகளைச் சிறப்புவகையிற பெற்றுள்ளது. இப் பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலும் செல்லச் செல்ல உயிர்வளர்ச் சிக்குப் பலவகைச் செயற்கைத் துணைகள் வேண்டி யிருப்பது தெரியவரும். உயிர்த்திரளின் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், அழகமைப்பிற் கும், எண்ணிக்கைப் பெருக்கிறகும் நடுக்கோட்டுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது.

ஸ்விஸ் நாட்டு அறிஞர் ஒருவர் நினைவூட்டு கிறபடி, உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் ஐந்தடி உயரந்தானும் வளர்வது அரிது. துருவங்களண்டைப் பாசிகள் கூட மிக அருமை யாகவே காணப்படுகின்றன. ஆனால் நம் தென் இந்தியாபோன்ற நடுக்கோட்டுப்பகுதியிலோ நூறு, நூற்றிருபது அடி உயரமுள்ள மூங்கில்கூடப் 'புல்' எனப்படுகிறது. "புறக்காழனவே புல்லென மொழிப்" என்னும் தொல்காப்பிய உரை காண்க. மற்றும் ஆல மரம் நமக்கு ஒரு மரமே ; குளிர்ந்த வடநாட்டினர் அஃது ஒரு காடு எனக் கணிப்பராம்.

எனவே, உயிர் வகைகளின் பிறப்பிடம் தென்

பகுதியா யிருப்பதே பொருத்த

1

முடையது.

Geography. 2 Equatorial regions. 8 Switzerland,

நடு