பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

குமரிக் கண்டம்

ஆசியா, தென் உருசியா, வடதுருவம் இவை ஒரோ காலத்து உறைவிடங்களா யிருந்திருத்தல்

யன்றி முதலிடங்களாக இருந்திருக்க முடியா.

கூடுமே

மேலும் உலகின் தட்ப வெப்ப நிலைகளைப் பார்த் தாலும் மனிதர் தோற்றம் முதலில் முதலில் ஏற்பட்டது தென் இந்தியாவிலேயோ அல்லது அதன் அருகி லேயோதான் என்பது போதரும்.

நிலநூல் கூறுகின்றபடி இம் மண்ணுலகம் ஞாயிறோடு ஞாயிறாய் அதன் பாரிய ஒளிப்பிழம்பின் ஒருபகுதியாய் இருந்தது. ஞாயிறு தன்னைத்தானே சுற்றும் விரைவினால் அதனினின்றும் சிதறி வீழ்ந்த திவலைகளே கோள்களும் துணைக்கோள்களும் ஆகும். நமது மண் உலகமாகிய கோளும் அத்தகைய ஒரு பிழம்புத் திவலையேயாம்.

முதலில் இதுவும் ஞாயிற்றைப் போன்ற ஆவிப் பிழம்பாகவே இருந்து படிப்படியாகக் கொதித்துருகி நிற்கும் குழம்பாகவும், அதன்பின் ஞாயிற்றைச் சுற் றும் விரைவினாலும் தன்னைத் தானே சுற்றும் விரை வினாலும் மேன்மேலுங் குளிர்ந்து திண்மையான மேல் தோட்டினை உடையதாகவும் மாறி வந்தது.

இங்ஙனம் மாறுவதில் நாம் உற்று நோக்கத்தக்க உண்மை ஒன்றுண்டு. ஒரு பம்பரம் சுழலும் பொழுது அதில் அசையாத பகுதிகள், நடு அச்சு பம் பரத்தைத் துளைக்கும் இடமான உச்சியும் அடிப் பகுதியுமே யாகும். பம்பரத்தின் நடு வட்டமே மிக விரைவாகச் சழலும். இது போலவே உலகிலும், வட தென் துருவப் பகுதிகள் பெரும்பாலும் அசையாமல் தம்மைத் தாமே சுழலும். நடுக்கோட்டுப் பகுதியே மிக விரைவாகச் சுழலும் இடமாம்.