தன் இந்தியாவின் பழமைக்கான சான்றுகள்- 15
இக் காரணத்தால் மேல்தோடு குளிரும்போது பிற பகுதிகளைவிட இந் நடுக்கோட்டுப் பகுதியே முன் கூட்டிக் குளிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். கொதிக்கின்ற பிழம்பில் உயிர் வகைகள் இருக்க முடியாதல்லவா? எனவே, முதன்முதல் குளிர்ந்து நேரிய தட்பவெப்ப நிலைகளை உடைய இப் பகுதியி லேயே உயிர் வாழ்க்கை தொடங்கி இருத்தல் வேண் டும் என்று உய்த்துணர்வதில் தவறென்ன?
இனித் தென இந்திய மண் இயல்புபற்றி ஞால நூலார்' கூறுவதைப் பார்ப்போம். இவர்களது ஆராய்ச்சியின்படி, தென் இந்தியா இலங்கை இவை பெரும்பாலும் கருங்கற் பாங்காகவே இருக்கின்றன. இவற்றின் பாறைகள் நெருப்பு வண்ணப்பாறை? என்ற வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கொதிக்கிற நெருப்புக் குழம்பாயிருந்து பின் இறு கிய பாறையாகும்; எனவே இதில் எத்தகைய உயிர் வகையும் இருப்பதற்கு இடமில்லை.
று
இதிலிருந்து உயிர் இனங்கள் தோன்றுவதற்கு முன்னைய காலந்தொட்டே, தென் இந்தியா நிலப் பகுதியாக இருந்தது தெளிவாகின்றது.
இதற்கு நேர்மாறாக வட இந்தியா, இமாலயம், பிற ஆசியப் பகுதிகள் இவற்றின் மண் இயல் பையும் பாறை இயல்பையும் பார்த்தால் அவை மிகவும் பிற்பட்டவை என்பது தெளிவாக விளங்கு கிறது.
வட இந்தியப் பகுதிகளின் நிலத்தில் எவ்வளவு ஆழந்தோண்டினும் கருங்கல் பாங்கான நிலம் காண்ப தரிது. ஏனெனில், அப் பகுதி முழுமையும் உண்மை 1 Geologists. 2 Igneous rocks.