பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

குமரிக் கண்டம்

யில் பல்லாயிர ஆண்டுகளாகச் சிந்து கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வணடல்களால் ஏற்பட்டதே யாகும் என்க. இதனினும் சற்றுப் பழமையான

மாலயமோ எனில் உலக வரலாற்றின் மிகப் பிந் திய நாள்வரையிற் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடற் சிப்பிகளும், நண்டு முதலிய கடலுயிர்களின் எலும்புக் கூடு களும் சுவடுகளும் இவ்வுண்மைக்குச் சான்று பகர் வனவாம்.

மேலும், இவ் விடங்களின் நில அடுக்குகளில் செடிகொடிவகை உயிர்வகைகளின் சுவடுகள் காணப் படுகின்றன. அவையும் மிகப் பழைய உயிர்வகை களாக இல்லை. இவற்றிற்கு மாறாகத் தென் இந்தி யப் பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர்வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக் கல்லே காணப்படுகிறதென்று முன் கூறினோம். அதன் மேற்பகுதிகளில் மிகப் பழைய செடி கொடி வகைகள், உயிர் வகைகள் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன.

கோட்டத்தைச்

மேலும், திருநெல்வேலிக் சேர்ந்த ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில் மிகப் பழமையான மனித எலும்புக் கூடுகளும், தலை ஓடு களும் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இவற்றை நுணுகி ஆராய்ந்த அறிஞர். இவையே உலகின் மற்றெந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளையும் விடப் பழமை வாய்ந்தவை என்றும், பெரும்பாலும் இவையே மனிதத் தோற்றத்தின் தொடக்கக் காலத் தைச் சார்ந்தவையா யிருக்கக் கூடுமென்றும் அறி விக்கின்றனர்.