தென் இந்தியாவின் பழமைக்கான சான்றுகள் 17
துணை
நில இயல, நிலத்தோற்ற இயல், 'ஞால இயல், இயல்,'ஞால ஆவி மண்டல நிலை இயல் இவற்றின் கொண்டும் உய்த்துணர்வு கொண்டும் மிகப் பழமை யான காலத்தின் உலகப் படத்தை அறிஞர்கள் பலர் வரைந்து காட்டியுள்ளனர். அதில் சென்ற 150,000 அல்லது 200,000 ஆண்டுகளாக தென் இந்தியா, நிலப்பகுதியாக இருந்து வந்திருப்பதாகக் காட்டப்பட் டுள்ளது.
-
வட
இன்னும் தமிழ்நாட்டின பழமையைக் காட்ட வரலாற்றுச் சான்றுகளும் பல உள. ஆரியர் இந்தியா வந்தது கி.மு.1500 என்றும், 2000 என்றும், 3000 என்றும் பலவாறாக வரலாற்றறிஞர் உரைக் கின்றனர். எப்படியும் திராவிடர் நாகரிகம் இதனினும் பழமையானதாதலின், இது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்டதென்பதற்கு ஐயமில்லை. அதோடு ஆரியரின் மிகப் பழமையான நூலாகிய இருக்கு வேதம் அவர்கள் இந்தியாவிற்கு வந்தபின், ஏற்பட்ட தாதலால் அதற்கும் திராவிட நாகரிகம் முற்பட்ட தென்பது சொல்லாமே அமையும்.
வரலாற்றறிஞர் பலர் இருக்கு வேதமே உலகின் முதல் இலக்கியம் என்று கருதுகின்றனர். இவர் களுக்குத் தமிழிலக்கியத்தைப்பற்றிய அறிவும், ஆராய்ச்சியும் இருந்திருக்க இடமில்லை. தமிழ்நாட் டாரின் நான்கு ஊழிகளும் வட நாட்டார் பாகுபாடா கு கிய 4 யுகங்களும் ஒன்றே என்று கீழே காட்டு கிறோம். அதன்படி தமிழின் தலை இடைச் சங்கங்கள் முதல்மூன்று ஊழிகளுக்குட்பட்டவை. வேதங்களோ பாரதகாலமாகிய மூன்றாம் ஊழி இறுதியை ஒட்டி 'Cosmology. "Geology. Meteorology.
இ2