பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

குமரிக் கண்டம்

அப் பாரதக் கதையை எழுதிய வேதவியாசரால் ஏற் பட்டவை.

இதனைத் தொல்காப்பியம்

நச்சினார்க்கினியர்

அது

உரையாலும் காணலாம்."நான்மறை" என்னும் சொற் றொடர்க்குப் பொருள் கூறுமிடத்து அவர் "நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடைமையால் நான் மறை என்றார் ; அவை தைத்திரியமும் பௌடிகமும் தலவகாரமும் சாமவேதமும் ஆம். இனி இருக்கும் யசு வும் சாமமும் அதர்வணமும் என்பாரும் உளர். பொருந்தாது. இவர் (தொல்காப்பியர்) இந் நூல் செய்தபின்னர், வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்வதற்கு நான்குகூறாக இவற்றைச் செய்தாராதலின்" என்று கூறுகிறார். இதனால் தமிழின் பழைய நூலாகிய தொல்காப்பியம் இருக்குமுதலிய வேதநூல்களுக்கு முந்திய தென்பது பெறப்படும்.

ஆரிய நாகரிகத்தினும் தமிழ் நாகரிகம் பன்னூறு மடங்கு பழைமை யுடையது என்பதைச் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது தொடக்கற்ற பழம் பெருமையே காட்டும். காட்டும். திருக்குறளில் பழங்குடி என்னும் தொடரை விளக்குகையில் பரிமேலழகர், சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்ட குடி என்று கூறுவது

காண்க.

>>

கி. மு. 1000 ஆண்டுக்கு முன்னதாகக் கூறப்படும் பாரதப் போரில் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன் இருபடைக்கும் சோறு வழங்கியதாகப் புறப்பாடல் ஒன்று கூறுகின்றது. இங்ஙனம் பெருஞ் சோறு வழங்கிய காரணத்தால் இவன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் என அழைக்கப்பட்டான்.