குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 19 இவனைப் பாடிய புலவரான முரஞ்சியூர் முடிநாகராய ரும் இவன் காலத்தவராதலின் பாரதகாலந்தொட்டே தமிழிற் சிறந்த பாக்கள் இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகின்றது.
ம
பாரதக் கதையில் பாண்டியனது தலைநகர் மண வூர் என்று கூறப்படுவதனால் அஃது இடைச்சங்கத் னும் பிந்தியது என்றும்,வால்மீகியாரின் இராமா யணத்தில் கவாடபுரமே தலைநகராகக் கூறப்படுதலால் அஃது இடைச்சங்ககாலத்தில் இருந்ததென்றும், தலைச்சங்கம் இராமாயணத்திற்கும், மாபாரதத்திற்கும் மிகப் பழமையானது என்றும் ஏற்படுகின்றன.
தவிர, சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங் கெயிலெறிந்த தொடித்தொட் செம்பியன் முதலிய சோழமன்னர், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவர். இராமாயண பாரத காலங்களிலும், சிலப்பதிகார காலத்திலுங்கூட இவர்கள் மிகத் தொன்மையான புராணத் தலைவராகவே கருதப்பட்டனர். சோழரின் பழமையிதுவாயின் அவரினும் பழமையான பாண்டி யரைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை.
௪. குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா?
மிகப்
இதுகாறும் தென் இந்தியா உலகின் பழமையான நிலப்பகுதி என்றும், மிகப் பழமையான செடிகொடி வகைகளும், உயிர் வகைகளும், மனித நாகரிகமும் இதில் இருந்திருக்கின்றன என்றும் காட்டினோம்.