20
குமரிக் கண்டம்
இனி, இத் தென்நாட்டிற்கும் தெற்கில் குமரிக் கண்டம் என்றோ இலெமூரியாக் கண்டம் என்றோ, ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்ற முடிபுக்கு அறிஞர்கள் எப்படி வந்தார்கள் என்பதைத் தெளிவு படுத்துவதுடன், அந்நிலப்பரப்புடன் தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு என்பதையும் விளக்குவோம்.
உயிர்த்தோற்றம், மனிதத் தோற்றம் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் செடிகொடி வகை கள் உயிர்கள் இவற்றின் செழித்த வளர்ச்சியும், பெருக்கமும், அளவும் உலக நடுக்கோட்டுப் பகுதி யிலேயே தலைசிறந்து விளங்கின என்று காட்டினர் என்பதாக மேலே கூறினோம்.
அங்ஙனம் நடுக்கோட்டுப் பகுதிக்கு அண்மை யிலோ, அல்லது நடுக்கோட்டுப் பகுதியிலோ இருக் கும் இக்கால நிலப்பகுதிகள் ஆப்பிரிக்கா, தென்இந்தியா, இலங்கை, மலாய் நாடு, கிழக்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா என்பவையே. இந் நிலப்பரப்புக்கள் இன்றும் செடிகொடி வகைகள், உயர்மரங்க ளடர்ந்த காடுகள், உயிர் வகைகள் முதலியன செறிந்து விளங்கு கின்றன.
இவற்றுள் தென் அமெரிக்கா அண்மையிலேயே மேல் நாட்டினரது குடியேற்ற நாடாகியது. அதற்கு முன் பழமையான் பெருவிய, மய நாகரிகங்கள் தென் அமெரிக்கா, நடு அமெரிக்காப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்தன. இந்நாகரிகங்கள் அப்பகுதி களிலேயே ஏற்பட்டவையல்ல; இலெமூரிய நாக ரிகத்தின் கிளையாகிய அத்லாந்திய நாகரிகத்தை ஒட்டி ஏற்பட்டவையே.
1 Peruvian.
Mayan.