பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 21

ஏ ஏனைய பகுதிகளுள், இந்தியாவின் மண் செடி கொடி உயிர் இனங்கள் பெரிதும் ஆப்பிரிக்கா இனங் களை ஒத்திருக்கின்றன; அதுவேபோன்று கிழக்கிந் தியத் தீவுகள், மலாய், பஸிபிக் தீவுகள் இவை ஒரு சார் ஆஸ்திரேலிய இனங்களையும், ஒருசார் வட அமெரிக்காவிலுள்ள காலிபோர்னிய இனங்களையும் ஒத்திருக்கின்றமை காணலாம்.

ஆப்பிரிக்காப் பக்கமிருக்கும் மடகாஸ்கர் தீவு நில இயல்படி ஆப்பிரிக்காவுடன் வைத்தெண்ணப் படினும்,உயிர்விகை செடிகொடி வகைச் சார்பில் முற்றிலும் ஆப்பிரிக்காவையும் ஒவ்வாது ஆசியாவை யும் ஒவ்வாது இரண்டிற்கும் இடைப்பட்டதொரு நிலையிலிருப்பது குறிப்பிடத் தக்கது.

சில காலங்களுக்குமுன் ஸர் ஜான மரே என்பவர் இந்து மாக்கடல் ஆராய்ச்சிக்கு என இருபதி னாயிரம் பொன் முதலீடு வைத்துச் சென்றனர். அதன் பயனாக நிறுவப்பெற்ற ஆராய்ச்சிக் கழகத்தார், சிந்து ஆறும் அவ் ஆற்றின் பள்ளத்தாக்கும், அதன் அருகி லுள்ள 'ஆரவல்லி மலைகளும் கடலுள் பெருந்தொலை *சொக்கோத்ரா வரை நீண்டு கிடந்ததற்கான குறிகள் அத்தீவில் உள்ளன என்று கூறுகின்றனர். குறிப் பாக ஆரவல்லி மலையின் தொடர்ச்சியும், ஸிந்து ஓடிய பள்ளத்தாக்கும் அதிற காணப்படுகின்றன

வாம்.

ஆப்பிரிக்காவில் போபோர்ட் குழுவைச் சார்ந்த செடி வகை உயிர் வகைகள் இந்தியாவில் உள்ள பஞ்செத்துக்கள்,கத்தினிகள்' என்பவற்றையும், ஆப்

3

1 Madagascar. 2 Sir John Murray. Aravalli Hills. 4 Sokotra. 5 Beaufort. • Panchets. 7 Kathnis.